வேலையிட விபத்துகளில் 32 பேர் உயிரிழந்தனர்

2022ஆம் ஆண்டில் வேலையிட விபத்துகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2020ஆம் ஆண்டில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கையைவிட அது அதிகம். அவற்றில் சில.

பிப்ரவரி 6:

கனரக வாகனத்தின் 56 வயது ஓட்டுநர் ஒருவர் இறங்கும்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். கெப்பல் முனையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி அவர் மாண்டார்.

பிப்ரவரி 11:

தானியக்க இயந்திரம் நகர்ந்து அதில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழந்தார்.

பிப்ரவரி 11:

உட்லண்ட்ஸ் செக்டர் 2ல் 52 வயது உள்ளூர் துப்புரவாளர் ஒருவர் கார்ப்பேட்டையில் வேலை செய்துகொண்டிருந்தபோது நிலைகுலைந்து விழுந்தார்.

பிப்ரவரி 23:

தெம்பனிஸ் ஸ்திரீட் 64ல் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் கட்டுமானத் தளத்தில் 49 வயது சீன நாட்டவர் ஒருவர், பளுதூக்கி பக்கவாட்டில் சாய்ந்ததால் உயிரிழந்தார்.

மார்ச் 21:

பளுதூக்கி வாகனம் தலைகீழாக சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் பலியானார். பயனியரில் உள்ள லிடா ஓஷனில் மேடு பள்ளமுள்ள இடத்தில் வாகனத்தை அவர் செலுத்திக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

மார்ச் 28:

30, 42 வயதுடைய இரண்டு பங்ளாதேஷ் ஊழியர்கள் துவாசில் உள்ள கெப்பல் கப்பல் பட்டறையில் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மாண்டனர்.

ஏப்ரல் 1:

ஜூரோங் வெஸ்ட்டில் ஃபர்ஸ்ட் லோக் யாங் ரோடு, லோக் யாங் வே சந்திப்பில் மற்றொரு தனியார் வாகனத்துடன் மோதியதில் தனியார் பேருந்து ஓட்டுநரான 72 வயது சிங்கப்பூரர் மரணமடைந்தார்.

ஏப்ரல் 4:

36 வயது இந்தோனீசிய ஊழியர் ஒருவர், படகை இழுத்துக் கட்டும்போது நிலைதடுமாறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.

ஏப்ரல் 8:

மார்க்கெட் ஸ்திரீட்டில் உள்ள கேப்பிட்டஸ்பிரிங் கட்டடத்தின் 16வது மாடியில் மேற்பூச்சு விழுந்து சிங்கப்பூரரான 48 வயது பொறியாளர் மரணமடைந்தார்.

ஏப்ரல் 10:

சிங்கப்பூரரான 24 வயது உணவு விநியோகிப்பாளர் ஒருவர், வேன் மோதியதில் மரணமடைந்தார். கம்பாஸ் அவென்யூவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஏப்ரல் 18:

உள்ளூரின் 65 வயது மின்சாரப் பழுதுபார்ப்பாளர் ஒருவர், ஏணியிலிருந்து 1.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தார். தோ பாயோவில் உள்ள ஓர் உணவகத்தில் கண்காணிப்புக் கேமராவை பொருத்திக் கொண்டிருந்தபோது அவர் தவறி விழுந்தார். ஏப்ரல் 27ஆம் தேதி அவர் இறந்தார்.

ஏப்ரல் 21:

செம்பவாங்கில் உள்ள டான் ஹோ கெங் கோயிலில் தொங்கும் அலங்காரங்களை மாட்டிக்கொண்டிருந்தபோது 64 வயது உள்ளூர் ஊழியர் ஏணியிலிருந்து தவறி விழுந்தார். ஏப்ரல் 23ஆம் தேதி அவர் காலமானார்.

ஏப்ரல் 22:

தானா மேராவில் உள்ள வேலையிடத்தில் ஓய்விடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 32 வயது ஊழியர் மீது மற்றொரு வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்தார்.

ஏப்ரல் 27:

கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஏறியதில் இந்திய நாட்டைச் சேர்ந்த 39 வயது ஊழியர் மரணமுற்றார். ஈசூன் இண்டஸ்டிரியல் ஸ்திரீட் 1ல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஏப்ரல் 30:

கடும் மழை, காற்று காரணமாக உலோகத் தாங்கிகள் உடைந்த தில் 49 வயது இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் இறந்தார். கொள்கலன் அலுவலகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!