உயிருக்குப் போராடும் பச்சிளங்குழந்தை

ரச்சனா வேலாயுதம்

 

தவழ்ந்­து சென்று பெற்­றோரை மகிழ்­விக்க வேண்­டிய பிஞ்­சுப் பரு­வத்­தில் உயிர்­பி­ழைக்­கப் போராடி வரு­கி­றார் 18 மாத ஷமெல் எடி­ரி­யன் பில­பித்­திய.

பிறந்த எட்டு மாதங்­க­ளி­லேயே அரிய வகை நோயால் பாதிக்­கப்­பட்ட இந்­தக் குழந்தை, இரண்டு வய­தைத் தொடு­வ­தற்­குள் விலை உயர்ந்த சிகிச்சை ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்­டிய இக்­கட்­டான நிலை ஏற்­பட்­டுள்­ளது.

முது­கெ­லும்பு தசைச் சிதைவு என்ற நோயால் ஷமெல் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

முது­கெ­லும்பு தசை சிதைவு நோயின் இரண்­டா­வது நிலை­யில் ஷமெல் இருப்­ப­தாக கடந்த ஆண்டு நவம்­பர் 15ஆம் தேதி­யன்று அவ­ரது பெற்­றோ­ரான திரு அச்­சிந்த பில­பித்­திய, திரு­மதி துலாஞ்­சலி வாக்­வெலா ஆகி­யோ­ருக்­குத் தெரி­ய­வந்­தது.

மர­ப­ணுவை நிரந்­த­ர­மாக மாற்­றக்­கூ­டிய ‘ஸொல்­கென்ஸ்மா’ என்ற மருந்தை தனது இரண்­டா­வது பிறந்­த­நா­ளுக்கு முன்பு ஷமெல் பெற்­றுக்­கொள்ள வேண்­டும்.

இந்­தச் சிகிச்­சைக்கு ஏறத்­தாழ $3 மில்­லி­யன் தேவைப்­ப­டு­கிறது. எனவே, குழந்­தை­யின் உயி­ரைக் காப்­பாற்ற நிதி திரட்­டும் முயற்சி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது.

“அரிய நோயால் ஷமெல் அவ­திப்­ப­டு­கி­றார் என்று தெரிந்­த­தும் நாங்­கள் கதறி அழு­தோம். மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின்­போது ஷமெல் அழு­வார். அப்­போது எங்­கள் மனம் பதைப­தைக்­கும். இருப்­பி­னும், குடும்­ப­மாக ஒன்றிணைந்து மனம் தள­ரா­மல் இந்­தக் கடு­மை­யான சவாலை எதிர்­கொள்­கி­றோம்,” என்று இல்­லத்தர­சி­யான ஷமெ­லின் தாயார் திரு­மதி துலாஞ்­சலி, 34, தெரி­வித்­தார். குழந்­தையை முழு நேர­மாக பார்த்­துக்­கொள்ள தமது வேலை­யி­லி­ருந்து அவர் வில­கி­னார். அவ­ரும் அவ­ரது தாயா­ரும் குழந்­தை­யைப் பார்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

2016ல் திரு­ம­ண­மாகி, 2017ல் திரு அச்­சிந்­த­னும் திரு­மதி துலாஞ்­ச­லி­யும் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய இலங்­கை­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­னர்.

தற்­போது இக்­கு­டும்­பம் சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் நான்­கறை வாடகை வீட்­டில் வசித்து வரு­கிறது. குழந்­தை­யின் தந்தை மட்­டும் வேலை செய்­வ­தால் மருத்­துவச் செல­வு­கள், அன்­றா­டச் செல­வு­கள் ஆகி­ய­வற்­றைச் சமா­ளிப்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது. 34 வயது திரு அச்­சிந்த, பொறி­யி­யல் மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

இந்­நி­லை­யில், குழந்­தை­யைக் காப்­பாற்ற பலர் நிதி வழங்­கு­வ­தைக் கண்டு அச்­சிந்த, துலாஞ்­சலி தம்­ப­தி­யர் மெய்யுருகி, நன்றிப்பெருக்கில் ஆழ்ந்துள்ளனர்.

‘ரே ஆஃப் ஹோப்’ எனப்­படும் நிதி திரட்­டும் அமைப்­பின் வழி கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் நிதி திரட்­டும் முயற்சி தொடங்­கி­யது.

அது­மட்­டு­மல்­லாது, ‘ஹோப் ஃபார் ஷமெல்’ என்ற இன்ஸ்டகிராம் பக்­கத்­தின் வழி­யா­க­வும் ஷமெ­லின் நிலை­யைப் பற்றி பொது­மக்­க­ளுக்கு எடுத்­து­ரைக்­கப்­ப­டு­கிறது.

“சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மின்றி, உல­க­ள­வி­லும் ஷமெ­லுக்­காக ஆத­ரவு குவி­கிறது. இது எங்களின் மனதை நெகிழ வைக்­கிறது. கைவி­டா­மல் தொடர்ந்து போராட எங்­களை ஊக்­கு­விக்­கிறது. இது­வரை நன்­கொடை கொடுத்­த­வர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்,” என்­றார் திரு அச்­சிந்த.

பெயர் குறிப்­பி­டாத ஒரு­வர் கடந்த வாரம் $500,000 நன்­கொடை வழங்­கி­ய­தாக குழந்­தை­யின் பெற்­றோர் தமிழ் முர­சிடம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சிகிச்­சைக்­குத் தேவை­யான $3,016,229.20 தொகையை திரட்ட இன்­னும் 25 நாள்­கள் மட்­டுமே உள்­ளன. ‘ஸொல்­கென்ஸ்மா’ மருந்து இரண்டு வய­துக்கு மேல் இருக்­கும் குழந்­தை­க­ளுக்கு ஏற்­றது அல்ல என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வரும் ஆகஸ்ட் மாதத்­தில் ஷமெ­லுக்கு இரண்டு வய­தாகிவிடும். ‘ஸொல்­கென்ஸ்மா’ மருந்தை அமெ­ரிக்கா அல்­லது சுவிட்­சர்­லாந்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வர­வ­ழைக்க சில மாதங்­கள் ஆகும் என்­ப­தால் இந்­தக் குறு­கிய கால­கட்­டத்­திற்­குள் தொகை­யைத் திரட்ட வேண்­டும் என்­றார் திரு அச்­சிந்த.

தேவைப்­படும் தொகை­யில் 51 விழுக்­காடு கிடைத்­து­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், ஷமெ­லின் உட­லில் பொருத்­தப்­பட்­டுள்ள உண­வுக் குழாய் மூலம் அவ­ரால் ஒரு­நா­ளுக்கு 120 மில்லி லிட்­டர் பால் மட்­டுமே உட்­கொள்ள முடி­கிறது. அதை­யும் உட்­கொள்ள அவர் சிர­மப்­ப­டு­வ­தாக திரு­மதி துலாஞ்­சலி கவ­லை­யு­டன் தெரி­வித்­தார்.

குழாய்க்­குள் பாலை ஊற்றி ஷமெல் அதை உட்­கொள்­ளும் வரை அக்­கு­ழாயை திரு­மதி துலாஞ்­சலி கையில் பிடித்­தி­ருப்­பார்.

தனது கைக­ளால் தன் பிள்­ளைக்கு ஊட்டி விடும் நாளை அவர் மிகுந்த ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.

‘ஸொல்­கென்ஸ்மா’ மருந்து கிடைக்­கு­வரை எவர்­யின் எனும் மருந்து ஷமெலுக்­குக் கொடுக்­கப்­ப­டு­கிறது.

ஒரு போத்­தல் எவர்­யின் மருந்­தின் விலை $16,000. இது தசை­சிதை­வின் வேகத்­தைக் குறைக்க உத­வு­கிறது.

ஷமெ­லுக்கு உதவ விரும்­பு­பவர்­கள் https://rayofhope.sg/campaign/baby-shamel/ என்ற இணை­யப்­பக்­கத்­துக்குச் சென்று நிதி­யு­தவி வழங்­க­லாம்.

‘ரே ஆஃப் ஹோப்’ இணை­யப்­பக்­கம் மருத்­து­வர்­க­ளின் குறிப்­பு­க­ளைப் பார்த்து ஷமெ­லின் நிலையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

இந்­தக் குழந்­தை­யின் மருத்­துவச் செல­வு­க­ளுக்­காக திரட்­டப்­படும் நிதி, தனது நிர்­வா­கி­கள் மூலம் நேர­டி­யாக மருத்­துவச் செல்­விற்­காக அனுப்­பி­வைக்­கப்­படும் என்­றும் அவ்வமைப்பு உறுதி அளித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!