புதிய விருந்­தி­னர்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை உட­ன­டி­யாக நிறுத்­தி­யுள்­ள மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட்

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களில் வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ர­வும் ஒன்று.வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ர­வின்­கீழ் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் தங்­கிய சில­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.பாதிப்­ப­டைந்த 13 பேருக்கு நோய் எவ்­வாறு பர­வி­யது என்­ப­தைக் கண்­ட­றிய சுகா­தார அமைச்சு விசா­ரணை நடத்­து­கிறது.

இந்­நி­லை­யில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக புதிய விருந்­தி­னர்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­டல் உட­ன­டி­யாக நிறுத்­தி­யுள்­ளது. வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ர­வின்­கீழ் தற்­போது அங்கு தங்­கு­வோர் உட­ன­டி­யாக வேறோர் இடத்­துக்கு மாற்­றப்­ப­டு­வர்.

வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டோர் தங்­கும் இட­மா­கச் செயல்­ப­டு­வ­தற்கு மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லு­டன் செய்­யப்­பட்ட ஒப்­பந்­தம் இம்­மா­த இறு­தி­யு­டன் முடி­கிறது. தற்­போது அங்கு தங்­கும் விருந்­தினர்­க­ளுக்­குப் படிப்­ப­டி­யாக மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்த ஹோட்­டல் ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கிறது.

அங்­கி­ருக்­கும் உண­வ­க­மும் நிகழ்ச்­சி­கள் நடத்­தும் அறை களும் மூடப்­படும். வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ர­வின்­கீழ் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் தங்­கிய அந்த 13 பேரும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள்.அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கடந்த மாதம் 2ஆம் தேதிக்­கும் 19ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் உறுதி செய்­யப்­பட்­டது.

13 பேரும் பஹ்­ரேன், கனடா, இந்­தோ­னீ­சியா உட்­பட பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­த­போ­தி­லும் அவர்களுக்கு ஏற்­பட்ட பாதிப்பு ஒரே மாதிரி இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

ஒரே ஆளி­ட­மி­ருந்து அவர்­கள் அனை­வ­ருக்­கும் கொரோனா கிருமி பர­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்று தேசிய பொது சுகா­தார ஆய்­வுக்­கூ­டம் நடத்­திய சோத­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.விசா­ரித்­த­தில், பாதிப்­ப­டைந்த 13 பேரும் கடந்த அக்­டோ­பர் மாதம் 22ஆம் தேதிக்­கும் கடந்த மாதம் 11ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ரவை மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நிறை­வேற்­றி­யது தெரி­ய­வந்­தது.

ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் பெறப்­பட்ட தர­வு­க­ளைக் கொண்டு இந்த 13 பேருக்­கும் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் கொரோனா கிருமி பர­வி­யி­ருக்­கும் சாத்­தி­யத்­தைப் புறக்­க­ணிக்க முடி­யாது என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது. வீட்­டி­லேயே இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டோ­ருக்­கா­கவே ஹோட்­டல்­களில் தனி­யொரு பகுதி, மாடி­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.இத­னால் மற்ற விருந்­தி­னர்­க­ளு­டன் அவர்­கள் தொடர்­பில் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

மாண்டரின் ஆர்ச்சர்ட்
கொவிட்-19
MANDARIN ORCHARD
hotel
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!