கொவிட்-19 திட்டங்கள் குறித்து பிரதமர் உரையின் ஆறு முக்கிய அம்சங்கள்

பிரதமரின் உரை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட, அதனைச் செவிமடுக்கும் பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமியுடன் மக்கள் தங்களது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் புதிய இயல்புவாழ்க்கைக்குத் திட்டமிட்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று (மே 31) தெரிவித்து இருந்தார். அவரது உரையின் ஆறு முக்கிய அம்சங்கள் இதோ:

♦ சமூகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் பட்சத்தில், ஜூன் 13க்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

♦ ஒருவர் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்விதமாக, எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ‘சுயபரிசோதனைக் கருவிகள்’ விரைவில் மருந்தகங்களில் விற்பனைக்கு வரும்.

♦ வேலையிடம் அல்லது சமூகம் போன்ற இயல்பான சூழல்களில், நலமாக இருப்போரும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

♦ கொரோனா தொற்றிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

♦ மாணவர்கள் இன்று முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
60 வயதும் அதற்கும் மேற்பட்டோர், முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

♦ சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமியுடன் வாழத் தயாராக வேண்டும்.

பிரதமர்
லீ சியன் லூங்
கொவிட்-19
உரை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!