சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா

வூஹான் நகரில் உள்ள பேரங்காடி ஒன்றில் காணப்படும் வாடிக்கையாளர் கூட்டம். படம்: ஏஎஃப்பி

உலகையே நிலைகுலையச் செய்து இன்னமும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

நேற்று அங்கு ஏழு சமூகத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நகரில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தொற்றுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வாழும் 11 மில்லியன் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அங்கு முழுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு சமூகத்தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. பின்னர் ஓராண்டு கழித்து இப்போது வெளிநாட்டு ஊழியர்களிடையே சமூகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் அண்மைய காலங்களில் பெரிய அளவில் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து அங்கு தொற்றைக் கண்டறிய தீவிர சோதனை மேற்கொள்ளும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வூஹான்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!