ரஜினி ஆதரவளிப்பார்: நம்பிக்கையில் கமல்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களைக் கவர கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன.
நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் சட்ட மன்றத் தொகுதி களிலும் போட்டியிடுகிறது மக்கள் நீதி மய்யம் கட்சி.
தேர்தலுக்காக அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மிகத் தீவிரமாக கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார்.  
“நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்டு இருக் கிறேன், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்,” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் அண்மைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தனது பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்டு இருக்கிறேன். கட்சி அலுவலகத்திற்கு வந்தவ ரிடம் ஆதரவு கேட்டு உள்ளேன். அவரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் இது தொடர்பாக பேசினேன்.
“கண்டிப்பாகச் செய்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித் துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர் யோசித்து முடிவெடுப்பார் என்று நம்புகிறேன்,” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திடம் கமல் ஹாசன் ஏற்கெனவே ஆதரவு கேட்டு இருந்தார். ரஜினிகாந்த் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பினால் அளிக்க லாம். அது அவரது விருப்பம். இது தொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று கமல் குறிப்பிட்டு இருந்தார். 
இந்த நிலையில்தான் தற்போது ரஜினிகாந்திடம் மீண்டும் கமல் ஹாசன் நேரடியாக ஆதரவு கேட்டு இருக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் இதுகுறித்து இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
பரபரப்பான அரசியல் சூழலில் தேர்தலில் தமது நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon