சுடச் சுடச் செய்திகள்

இந்தியத் தேர்தல்: உலகின் மிக அதிக செலவுமிக்கது

புதுடெல்லி: இந்தியாவில் தேர் தலை நடத்துவதும் எதிர்கொள்வ தும் பெரும் பொருட்செலவுக்குரிய விஷயமாக மாறி வருகிறது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.
எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர் களும் கட்சிகளும் கோடிக்கணக் கில் வாரி இறைப்பது வாடிக் கையாகி வருகிறது.
இம்முறை 25 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், மது,  போதைப் பொருட்கள், தங்கம் ஆகியவற்றை தேர்தல் களத்தில் இருந்து இந்திய அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த தேர்தல் காலத்தில் பறி முதல் செய்யப்பட்டதை விட இரு மடங்கு அதிகமாகும்.
இன்னும் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடையாத நிலையில் பறிமுதல் ஆகும் தொகை, பொருட்களின் மதிப்பு மேலும் பலமடங்கு அதிக ரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை தேர்தல் களத்தில் செலவிடப்பட்ட தொகை 7 பில்லி யன் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இது 5 பில்லியனாக இருந்தது. இதன் மூலம் உலகின் மிக செலவுள்ள தேர்தலாக இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உருவெடுத்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon