பன்முகத் தன்மையை அரவணைப்பதில் தீவிரம் காட்டிய இளையர்கள்

முஹம்­மது ஃபைரோஸ்

பல இனங்கள், பல சம­யங்கள் மதிப்புடன் வாழும் சிங்கப்­பூ­ரில் பல்வேறு சமூ­கத்­தி­ன­ரிடையே நல்­லி­ணக்­கத்தைத் தொடர்ந்து வலுப்­படுத்த அர­சாங்க, சமூகத் தரப்­பு­களில் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்றன. இங்­குள்ள உயர்கல்வி நிலை­யங்களில் உள்ளூர் மாண­வர் ­களு­டன் கணி­ச­மான எண்­ணிக்கை­யில் வெளி­நாட்டு மாண­வர்­களும் பயிலும் சூழல் தற்போது சாதா­ர­ண­மா­கி­விட்­டது. இதைக் கருத்­தில் கொண்டு உள்ளூர், வெளி­நாட்டு மாண­வர்­களிடையே புரிந்­து­ணர்வை­யும் தொடர்பை­யும் வலுப்­படுத்­தும் நோக்கில் தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூரி ‘பன்­மு­கத்­தன்மை. உள்­ள­டக்­கு­தல். நீங்கள்’ (DIY) எனும் நிகழ்ச்­சியை கடந்த ஜூன், செப்­டம்பர் மாதங்களில் நடத்­தி­யது. இதில் பங்­கேற்க சிங்கப்­பூ­ரின் ஜந்து பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களி­லி­ருந்து சுமார் 200 மாண­வர்­கள் பரிந்­துரைக்­கப்­பட் டனர். தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அமைந்­துள்ள ‘குளோபல் கனெக்ட் வில்லேஜ்’ஜில் இரண்டு நாட்கள் தங்­கி­யி­ருந்து அங்கு ஏற்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பயில­ரங்­கு­கள், சமூகத் திட்­டங்கள் போன்ற பயிற்சி அங்கங்களில் அவர்கள் கலந்து கொண்ட­னர்.

பயிற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நன்யாங் பல­துறைத் தொழிற்கல்­லூரி மாணவி நந்தினி மதி­வா­ணன், 18. பயிற்சிகளில் பங்­கேற்­ற­தன் மூலம் பிற கலா­சா­ரங்களைப் பற்றிய விழிப்­பு­ணர்­வும் புரி­த­லும் அதி­க­ரித்­த­தாகக் கூறிய நந்தினி, எதையும் தீவிர­மாக ஆரா­யா­மல் ஊகத்­தின் அடிப்­படை­யில் எந்த­வொரு முடி­வுக்­கும் வந்­து­வி­டக் கூடாது என்­பதைக் கற்­றுக்­கொண்ட­தாகத் தெரி­வித்­தார். சமு­தா­யத்­தில் மூத்த ஊழி­யர்­களின் பங்களிப்பை அங்­கீ­க­ரித்து, நன்றி தெரி­விக்­கும் வகையில் நிகழ்ச்­சி­யின் இறுதி அங்க­மாக மூத்த துப்­பு­ர­வா­ளர்­களுக்கு மதிய உணவு பரி­மா­றி­னர் மாண­வர்­கள்.

‘பன்­மு­கத்­தன்மை. உள்­ள­டக்­கு­தல். நீங்கள்’ எனும் நிகழ்ச்­சி­யின் இறு­தி­ அங்கமாக, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மூத்த துப்­பு­ர­வா­ளர்­களுக்குப் பல­துறைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் மதிய உணவு பரி­மா­றினர். பச்சை டீ=சட்டை அணிந்து நின்றவாறு முதல் மேசையில் உணவு பரிமாறுகிறார் நந்தினி மதி­வா­ணன். படம்: தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திருநாவுக்கரசு வள்ளியம்மை

18 Nov 2019

பாடலும் என் பள்ளியும்

குமாரி சர்மிலி செல்வராஜி

18 Nov 2019

‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’

‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
படங்கள்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

18 Nov 2019

பெண்ணியத்திற்காக குரலெழுப்பும் மாதர்