குறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்

தசைகளை வலுப்படுத்தும் குறிக்கோளை ஜொனத்தன் அடைவதற்குத் தேவையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்கிறார். சிறு வயதிலேயே உடலை ஆரோக் கியமாக வைத்துக்கொள்வது அவசியம் என்று குறிப்பிட்ட ஜொனத்தன், “நம் உணவுவகைகள் அதிக மாவுச் சத்தும், கொழுப்புச் சத்தும் கொண்டவை. அவற்றை நாம் அளவுக்கு மீறி உண்ணாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  பெற்றோர்கள் தங்களின் பிள்ளை களுக்குச் சிறு வயதுமுதல் விளையாட்டுகளையும் உடற்பயிற்சி களையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளடக்க வலியுறுத்தவேண்டும். அது அவர்களைப் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படத் தூண்டும்,” என்றார்.

ஜொனத்தன் சந்தானம்
உயரம்: 1.75 மீட்டர்  
எடை: 68 கிலோ

அரசாங்க அதிகாரியாகப் பணிபுரியும் 24 வயது ஜொனத்தன், திரைப்படங் களில் உடல் கட்டுடன் காட்சி அளிக்கும் நடிகர்களைப்போல் தம் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள கடந்த எட்டு ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சிகளுடன் ஆரோக் கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வருகிறார். இவரின் வழக்கமான உடற்பயிற்சித் திட்டம்:
 வாரத்தில் 5 முறை 1.5 மணி நேரம் ஒதுக்கி உடற் பயிற்சி செய்தல்
 மெதுவோட்டம், நீச்சல் என வாரத்திற்கு 2 முறை ‘கார்டியோ’ பயிற்சிகளில் ஈடுபடுதல்
 வாரம் 3 முறை உடற்பயிற்சிக் கூடத்தில் எடைத் தூக்குதல்