ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

உயர்நிலை 3 மாணவரான ஹைரூலின் காலணிகள் கிழிந்திருந்ததை அவரது வகுப்பாசிரியர் திரு ஜெஃப்ரி புவா கவனித்தார். அவர் தமது மாணவருக்கு உதவ விரும்பினார். ஆனால், நேரடியாக உதவினால் தம்மீது மற்றவர்கள் பரிதாபப்படுவதாக ஹைரூல் நினைத்து வருந்தக்கூடும் என்று எண்ணிய ஆசிரியர், வகுப்பில் முதல் மூன்று நிலைகளில் வரும் மாணவர்களுக்கு புதிய காலணி கள் கிடைக்கும் எனக் கூறினார். 
அறிவான, கடுமையாக உழைக்கும் ஹைரூல் நிச்சயம் முதல் மூன்று நிலைகளில் வருவார் என கான் எங் செங் பள்ளியின் ஆசிரியரான திரு ஜெஃப்ரி அறிந்திருந்தார்.
கடுமையான உழைப்பும் முயற்சி யுமே வாழ்க்கையில் முன்னேறும் வழி என்பதை நம்பியவர் ஹைரூல். 

உயர்நிலை நான்கில்,  நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டுத் தேர்வுக் குப் படித்தார். ஏழு ஏ1, ஒரு ஏ2 தகுதிகளுடன் சிறந்த தேர்ச்சியைப் பெற்றார். தொடர்ந்து  ஏ நிலைத் தேர்வில் ஆறு ‘டிஸ்டிங்ஷன்’களு டன் தேர்ச்சி,   சட்டப்படிப்பைத் தொடர நிபந்தனையில்லாத ஓசிபிசி வங்கியில் கல்வி உபகாரச் சம்பளம் என  ஹைரூல் தொடர்ந்து கல்வியில் மேன்மையடைந்தார்.
“யாருக்குமே வாழ்க்கையில் அனைத்தும் சரியாக அமைந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக் கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். ஏழ்மை எனக்கு திறன் களைப் பெற்றிருக்கக் கற்றுக் கொடுத்துள்ளது. எல்லாப் பிரச் சினைகளுக்குமே தீர்வு உண்டு என நம்புபவன் நான். எந்தச் சமயத்திலும் நம்பிக்கையை இழக் கக்கூடாது,” என்று ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் சிங்கப் பூரின் வளர்ந்து வரும் திறன்மிக்க சட்டத்துறையாளர்களில் ஒரு வராகத் திகழும் 28 வயது திரு ஹைரூல் ஹக்கீம். 
வளரும் காலத்தில்  அனுப வித்த ஏழ்மையிலிருந்து ஹைரூல் இப்போது மீண்டுவிட்டார். 

மூளைப் புற்றுநோயால் 58 வயதில் தந்தை இறந்தபோது ஹைரூலுக்கு வயது 14. பலதுறை தொழில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவரது சகோ தரிக்கு வயது 21. 
புற்றுநோயுடன், சிறுநீரகச் செய லிழப்பு, பார்வை இழப்பு போன்ற பல நோய்களால் தந்தை அவதி யுற்றார். தொழிற்சாலையில் பணி புரிந்த ஹைரூலின் தாயார் ஏறக்குறைய தான் பெற்ற $1,000 மாத வருமானத்தில் கணவரின் மருத்துவ செலவுகளைக் கவனித் துக்கொண்டு இரண்டு பிள்ளை களை வளர்க்க பெரும்பாடுபட் டார்.  

“எனக்காகவும் என் குடும்பத் திற்காகவும் நான் கல்வியில் சிறக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். என் குடும்பத்தைத் துன்பத்திலிருந்து மீட்க இந்த ஒரு வழிதான் எனக்குத் தெரிந்தது.

“பணம் இருந்திருந்தால் மேலும் தரமான சிகிச்சையை அளித்து தந்தையின் இறப்பைத் தவிர்த்திருக்கலாம் அல்லது அவரின் இறுதிக்காலத்தை இன்னும் கௌரவத்துடன் கழிக்க உதவியிருக்கலாம். இதுபோன்ற ஒருநிலை என் தாயாருக்கு வரக் கூடாது,” என்றார் திரு ஹைரூல்.
ஹைரூலின் தந்தைக்கு நிரந்தர வேலையில்லை. காப்பிக் கடை, சாப்பாட்டுக் கடைகளில் உதவி செய்வது என பல வேலைகளைப் பார்த்தார்.  நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காததால் அவரது சிறுநீரகம் செயலிழந்தது. அப் போது  ஹைரூலுக்கு வயது ஏழு.
அதனால் தொடர்ந்து மேலும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற் பட, அவர் வேலையைவிட வேண்டி யதாகியது. ஒரு கட்டத்தில் கண் பார்வை பறிபோனது. வலது காலில் ஏற்பட்ட புண் புரையோடிய தால், அக்காலை அகற்றும் நிலை வந்தது. இருதயமும் நுரையீரலும் செயலிழந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. தொடர்ந்து புற்றுநோயும் ஏற்பட்டது. 

சிறுநீரக சுத்திகரிப்புக்கு மட் டும் மாதம் $1,200 ஆகும் என்று ஹைரூல் கூறினார். 
அதனால் அவர்களது ஐந்தறை களைக் கொண்ட பெரிய வீவக வீட்டை விற்று, மூவறை வீட்டுக்கு மாற வேண்டியிருந்தது. அவரது அம்மாவின் நகைகளை விற்றார்கள். காப்புறுதிகளை ரத்து செய்தார்கள். வீட்டுக் கடனைச் செலுத்தவும் அப்பாவின் மருத்து வச் செலவுக்கும் கடன் வாங்கி னார்கள்.
பள்ளிக்கு அம்மா கொடுக்கும் காசில் பயிற்சிப் புத்தகங்கள் வாங் குவதற்காக பசியோடு இருந்த நாட்களை நினைவுகூர்ந்த ஹைரூல், “மற்றவர்களிடமிருந்த வசதி எனக்கு இல்லாதது அந்த அறியாத வயதில் எனக்கு எரிச் சலை ஏற்படுத்தியது,” என்றார்.
ஆரம்பத்தில் ஹைரூல் எதிர் கொண்ட மற்றொரு சிக்கல் மொழித் தேர்ச்சி. வீட்டில் தமிழில் மட்டுமே பேசிப் பழகியிருந்த ஹைரூல், தொடக்கநிலையில் படித்தபோது  ஆங்கிலத்தில் முழு மையாக ஒரு வாக்கியத்தை அமைக்கக்கூட சிரமப்படுவார். தொடக்க நிலை நான்கு வரை ஆங்கிலத் தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார். 

பிளாங்கா ரைஸ் தொடக்கப் பள்ளியில் அவரின் தொடக்கநிலை 4 ஆசிரியராக இருந்த திருமதி சானான் சிங் அவருக்கு ஆங்கிலம் சொல்லித்தர கூடுதல் முயற்சி எடுத்தார். கதைப் புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தார். கூடுதல் மொழிப் பயிற்சிகளைச் செய்வித் தார். சிண்டாவின் ஆங்கில துணைப் பாட வகுப்புகளுக்குச் சென்றார்.  ஆங்கிலப் பாடத்தில் எடுத்த முயற்சியினால் மற்ற பாடங்களிலும் ஹைரூலின் தேர்ச்சி உயர்ந்தது.
“திருமதி சிங் என் வாழ்க் கையை மாற்றினார். நான் தவறான பாதையில் சென்றிருக்கலாம். அல் லது சராசரி மாணவராகவே இருந் திருக்கலாம். எனக்காக முயற்சி எடுத்த ஆசிரியர்கள் இல்லா விடில் நான் இந்நிலையை அடைந் திருக்கமாட்டேன் என்று நினைக் கிறேன்,” என்றார் திரு ஹைரூல்.  
குடும்பச் சூழ்நிலை காரண மாக, தேசிய சேவைக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, முழு நேர மாக வேலை பார்க்க நினைத்தார் ஹைரூல். ஆனால் அவர் பட்டக் கல்வி பெறவேண்டும் என்பதில் அவரது தாயார் உறுதியாக இருந் தார். மேடைப் பேச்சில் ஆர்வமுள்ள திரு ஹைரூல் சட்டத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டார். செலவுகளைச் சமாளிக்க உயர் நிலைப்பள்ளி காலத்திலிருந்து டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்த ஹைரூல், பட்டப்படிப்புக்குப் பணம் சேர்க்க விற்பனையாள ராகவும் பணிபுரிந்துள்ளார். 
தற்போது 62 வயதான அவரது தாயாரை கவனித்துகொள்வதோடு சிண்டாவின் இளையர் மன்றத்தி லும் சேவையாற்றி வரும் இந்த இளையர், பல இளையர்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டி வரு­கிறார்.
“சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்க விடக்கூடாது என்பதை காலப்போக்கில் நான் உணர்ந்தேன். என்னைப் போலவே நிதிப் பிரச்சினை இருந்த பல சிறுவர்கள் திசை மாறுவது,  பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, அதற்கும் மேலாக திருடுவது, போதைப் பொருள் உட்கொள்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதைக் கூடப் பார்த்தேன். அந்த மாதிரி நான் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார்  இளையர் ஹைரூல். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி

20 May 2019

சிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள் 

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 May 2019

சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்