இந்திய தடுப்பூசி சான்றிதழ்கள் 96 நாடுகளில் ஏற்பு

புதுடெல்லி


கொரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தடுப்பூசி திட்டத்தில் முதன்மையாக உள்ளன.

இந்த தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) தனது அவசர பயன்பாடு பட்டியலில் சேர்த்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசிகளை முழுமையாக (2 டோஸ்கள்) போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அவசியமாகும்.

இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொண்டு, இந்திய பயணிகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதற்கு 96 உலக நாடுகள் முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த 96 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர ஒப்புதல் அளித்துள்ளது.

இதை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

“தற்போது 96 நாடுகள் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. அவை கோவிஷீல்டு, உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசிகள், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 ‘டோஸ்’களையும் செலுத்தி இருக்கிறபோது அவர்களை அங்கீகரிக்கிறது” என அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு செல்கிறவர்கள், சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழ்களை ‘கோவின்’ தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ர‌ஷ்யா, குவைத், ஐக்கிய அரபு சிற்றரசுகள், சுவிட்சர்லாந்து, துருக்கி, கிரீஸ், பக்ரைன், கத்தார், மாலத்தீவு, இலங்கை, மொரீசியஸ், பிரேசில், நேபாளம், ஈரான் உள்ளிட்டவை இந்த 96 நாடுகள் பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 109.59 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

74 கோடியே 21 லட்சத்து 62 ஆயிரத்து 940 பேர் முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளளனர்.

2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் செலுத்தியோர் எண்ணிக்கை 34 கோடியே 86 லட்சத்து 53 ஆயிரத்து 416 ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!