குழந்தைக்கு ‘இந்தியா’ எனப் பெயர் சூட்டிய பாகிஸ்தான்-பங்ளாதேஷ் இணையர்

பங்ளாதேஷ் வம்சாவளியையும் பாகிஸ்தான் வம்சாவளியையும் சேர்ந்த இணையர், தங்கள் குழந்தைக்கு ‘இந்தியா’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக வரைபடத்தில், பாகிஸ்தான்-இந்தியா-பங்ளாதேஷ் நாடுகள் அடுத்தடுத்து இருப்பதுபோல், தந்தை-மகன்-தாய் என்றிருக்கும் படத்தை ஓமார் இசா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“எல்லாப் புதிய பெற்றோருமே தங்கள் குழந்தையைக் கண்போல் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக உறங்கும்போது தங்களுக்கு நடுவில் குழந்தையைப் போட்டுக்கொள்வர். இப்போது என் மகன் சற்று பெரியவனாகிவிட்டான். அவனுக்கென்று தனிப் படுக்கையறை இருந்தாலும் பழகிவிட்டதால் அவன் எங்களுக்கு இடையிலேயே உறங்குகிறான். அதனால் ‘இப்ராகிம்’ என்ற அவனது உண்மைப் பெயருக்கு பதிலாக, இனி அவனை ‘இந்தியா’ என்று அழைக்க இருக்கிறோம். பாகிஸ்தான்-பங்ளாதேஷ் பெற்றோர்களுக்கு நடுவில் இருந்துகொண்டு, என் வாழ்க்கையில் ‘இந்தியா’ பல தொல்லைகளைக் கொடுத்து வருகிறான்,” என்று இசா பதிவிட்டு இருக்கிறார்.

அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் அமெரிக்கர் ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஃபேஸ்புக்வாசி ஒருவர் கருத்திட்டிருந்தார்.

அது உண்மைதான்! அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசிக்கும் தம் சகோதரியே அப்படத்தை எடுத்ததாக இசா குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!