சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்கக் கூடாது என்ற ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இது தொடர்பாக ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க இயலாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்தது. முன்னதாக, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய அன்பழகன் தரப்புக்கு உரிமை இல்லை என்று வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக் கறிஞர் நாகேஸ்வர ராவ், இத்தகைய சூழ்நிலையில் அன்பழகன் தரப்பு தங்களது வாதத்தை முன் வைக்க அனுதிக்கக் கூடாது என வலியுறுத்தினார். ஆனால் இக் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட ஜெயலலி தாவை விடுதலை செய்து கர்நா டகா உயர் நீதிமன்றம் நீதியைச் சிதைத்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த அவர், ஜெயலலிதா தமது பதவி யைப் பயன்படுத்தி இந்த வழக்கைத் திசை திருப்பியதாக குற்றம்சாட்டி னார். "இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, எதிர்த்தரப்பு தங்களது வாதங் களை முன்வைக்க போதுமான கால அவகாசத்தை வழங்க வில்லை. அதுவும் எழுத்துபூர் வமாகத் தாக்கல் செய்த ஆவணங்களைக் கூட அவர் முறையாகப் பரிசீலிக்கவில்லை.

"கர்நாடகா அரசு தரப்பும் நானும் முன்வைத்த ஆட்சே பனைகளையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்து நீதியின் மாண்பை கர்நாடகா உயர் நீதிமன்றம் முழுமையாகவே சிதைத்துவிட் டது," என்றார் சுவாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!