அதிக வட்டி தருவதாக ஆறு கோடி பேரிடம் மோசடி

கடந்த 20 ஆண்டுகளில் ஆறு கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள், அதாவது இருபது இந்தியர்களில் ஒருவர் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குற்றவியல் விசாரணைப் பிரிவு (சிபிஐ) தகவல்கள் கூறுகின்றன. அவர்களிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 120,000 கோடி ரூபாய் (S$24.2 பில்லியன்) என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 'சிட்ஃபண்ட்' என்ற பெயரில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் தொடங்கப்படும் நிதி நிறுவனங்கள், பணத்தை இரட்டிப்பாக்கி, மும்மடங் காக்கித் தருவதாகக் கூறி மக்களைத் தங்களது வலையில் விழவைக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 'ஆஸ்தா குழுமம்' ரூ.20,000 முதலீடு செய்தால் நான்கே ஆண்டுகளில் ரூ.60,000 தருவதாக ஒடிசா மாநில முதலீட்டாளர்களிடம் உறுதியளித்தது. 'பெர்ல்' குழுமத்தைச் சேர்ந்த பிஏசிஎல், பிஜிஎஃப் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள்தான் அதிகளவில் பணத்தைச் சுருட்டியுள்ளதாகக் கூறப் படுகிறது. 1996ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த இரு நிறுவனங்களும் பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தரைக் கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.51,000 கோடி பணத்தை விழுங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரு நிறுவனங்கள் மீதான மோசடிப் புகார்களை கடந்த 2014 பிப்ரவரி முதல் சிபிஐ விசாரித்து வரு கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!