வெற்றி பெற ஆளும் அதிமுக பெருந்தொகை செலவழித்தது - தயாநிதி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஆளும் அதிமுக பெருந்தொகையை செலவழித்ததாகவும், பணநாயகத்தினால் மட்டுமே அதிமுக வென்றுள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத் திலுள்ள சிலர் தங்கள் மன சாட்சியை பிசாசிடம் விற்றுவிட்ட தாக விமர்சித்தார். “வாக்குக்கு பணம் அளிக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியதால் ஆளும் கட்சி யினர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆளும் தரப்பு வென்றுள்ளது,” என்றார் தயாநிதி.

ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் திமுகதான் வெற்றி பெற்றிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் தீர்ப்பு திமுகவுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது என்றார். எனி னும் வாக்காளர்கள் குறித்த தயா நிதியின் காட்டமான விமர்சனம் சமூக வலைதளங்களில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்டன. திமுக தோல்வி முகமாக இருப்பதாக ஊடகங்க ளில் தகவல் வெளியானதே இதற்குக் காரணம். முன்னதாக வெளியான சில கருத்துக்கணிப்பு களால் இரு தினங்களுக்கு முன் னர் இதே பங்குகளின் விலை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்