மகன் கழுத்தை அறுத்த காவல்துறை ஆய்வாளர்: ராம்குமார் தந்தை புகார்

திருச்சி: தனது மகன் ராம்குமாரை கைது செய்தபோது அவர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுவது பொய் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார். கைது நடவடிக்கையின்போது தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலிசார்தான் தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக அவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

"கழுத்தை அறுத்து எனது மகனைக் கைது செய்து சென்றது முதல் எனது உடல்நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. அதனால் உடனடியாக புகார் அளிக்க முடியவில்லை," என பரமசிவன் தெரிவித்துள்ளார். இதனால் சுவாதி கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!