சென்னையில் குண்டர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் குண்டர்களை ஒழிப்பதற்காக காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கியிருக்கிறார். சென்னை காவல்துறையின் ஆணையாளராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து டி.ஜி.பி. எஸ். ஜார்ஜ் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் குண்டர்களை ஒழிப்பதற்கும் ஒவ்வொரு துணை ஆணையர் கட்டுப்பாட்டில் தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தனிப்படை காவல் துறையினர் அவரவர் பகுதியில் உள்ள குண்டர்களைக் கண்காணித்து வேட்டையாடி பிடிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading...
Load next