தமிழிசை: தமிழகம் வஞ்சிக்கப்படாது

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலு வலகத்தில் தமிழிசை செளந்தரராஜன், மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவைக்கு அண்மையில் தேர்ந்தெடுக் கப்பட்ட இல. கணேசன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது: "எங்களது கட்சியின் தேசியத் தலைவருடனான தமிழகத் தலைவர்களின் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே தயாரித்த அறிக்கையை அவரிடம் கொடுத்தோம். அதைப் படித்துப் பார்த்த அவர், தமிழகம் எந்த விதத்திலும் வஞ்சிக்கப்படாது. "காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் நியாயம் கிடைக்கும் வகையில் பாஜக நடந்துகொள்ளும். தமிழகத்துக்கு நிச்சயமாகத் தண்ணீர் கிடைக்கும்; நியாயம் கிடைக்கும்," என்றார் தமிழிசை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!