பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகளை இனி பயன்படுத்த முடியாது

செல்லா நோட்டு என அறிவிக்கப் பட்டபோதும் குறிப்பிட்ட காலத் திற்குத் தண்ணீர், மின்சாரக் கட்டணம் செலுத்த, மருந்துப் பொருட்கள் வாங்க என குறிப் பிட்ட தேவைகளுக்குப் பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தக் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் இனி அவற்றை ஒருவர் தனது வங்கிக் கணக்கில் மட்டும் செலுத்த முடியுமே தவிர வேறு எதற்கும் பயன்படுத்த இயலாது.

"பழைய ஐநூறு ரூபாய் நோட்டு களைப் பயன்படுத்துவதற்கான காலவரம்பு இன்று (நேற்று) நள்ளி ரவுடன் முடிகிறது. இந்தத் தளர்வுக் காலம் இனியும் நீட்டிக்கப்படாது," என்று நிதியமைச்சின் பொரு ளியல் விவகாரப் பிரிவுச் செயலர் சக்திகாந்த தாஸ் டுவிட்டர் மூலம் தெரிவித்தார். கடந்த மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திடீரென ஓர் அதிரடி அறி விப்பை வெளியிட்டார். கள்ளப் பணத்தை ஒழிக்கவும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவும் பயங்கரவாதத்திற்கான நிதி ஆதாரத்தை முடக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!