முதல்வர் பன்னீர் - ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்துப் பேசுவது என்பது அரிதிலும் அரிதானது. மாநில நலனுக் காக முதலமைச்சர் பதவி எந் தளவுக்கு முக்கியமோ அதில் எள்ளளவும் குறைந்ததல்ல எதிர்க்கட்சித் தலைவர் பதவி. ஜனநாயக நாட்டில் இந்த இரு பதவிகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை என்று ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி முதன்முதலாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றது முதல் 47 ஆண்டுகால வரலாற்றில் முதலமைச்சராக இருப்பவரும் எதிர்க் கட்சிக் தலைவராக இருப்பவரும் நேரில் சந்தித்து மக்கள் நலன் குறித்துப் பேசிய சம்பவங்கள் ஒன்றிரண்டாகத்தான் இருக்க முடியும்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஜன வரியில் அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மு.க. ஸ்டாலின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந் தித்தது அரசியல் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. முதலமைச்சரின் சுனாமி நிவாரணப் பணிக்கு தமது தந்தையின் நிதி உதவியை நேரில் வழங்குவதற்காக ஜெயலலிதாவை ஸ்டாலின் சந்தித்தார். புன்முறு வலுடன் ஸ்டாலினை வரவேற்ற ஜெயலலிதா, "அப்பா எப்படி இருக் கிறார்," என்று விசாரித்ததாகத் தக வல் வெளியானது. தமிழக அரசி யலில் நாகரிகம் பிறந்துவிட்டதாக அப்போது பத்திரிகைகள் எழுதின. ஆனால், அதற்கடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அந்தக் கருத்தைப் பொய்யாக்கின.

முதலமைச்சர் பதவியில் இருக் கக்கூடிய ஒருவரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டா லின் சந்தித்த சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. மாலை 5.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்த ஸ்டாலின் அவருடன் கிட்டத்தட்ட 15 நிமி டங்கள் பேசினார். இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என் றும் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிதி உதவி வழங்கவும் முதலமைச்சரிடம் திமுக சார்பில் வலியுறுத்தி யதாகத் தெரிவித்தார்.

ஓபிஎஸ்- ஸ்டாலின் சந்திப்பு. படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!