தாமே புதுவையின் தலைமை நிர்வாகி என்கிறார் கிரண்பேடி

புதுவை: ஆளுநர் என்ற வகையில் தமது பணிகளை அதிகாரத்திற் குட்பட்டு நேர்மையாகவும் செம்மை யாகவும் செய்ய விரும்புவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப்பக்கத்தில் புதுவை மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வரும் 2018, மே மாதம் பதவியை விட்டு விலகப்போவதாகக் குறிப்பிட் டுள்ளார். "புதுவை யூனியன் பிரதேசத் தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ளது. அதிகார வரம்புக்குட்பட்டு சட்டங்களை இயற்றும் அதிகாரம் அதற்கு உள் ளது. மத்திய அரசின் சட்டத் திற்குட்பட்டு அதன் செயல்பாடு இருந்தால் முழு ஆதரவு தருவேன். "யூனியன் பிரதேச தலைமை நிர்வாகியாக நான் இருப்பதால் நிதி, அரசுத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் போன்றவற்றில் சட்டத்தின்படி எனக்கே இறுதி அதிகாரம் உள்ளது. மத் திய அரசுக்கு நானே பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்," என்று கிரண்பேடி சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த 7 மாதங்களில் தமது பதவிக்குட்பட்ட பல்வேறு செயல் பாடுகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், புதுவையில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித் துள்ளார். "சட்டத்தின் முன்பு அனை வரும் சமம் என்பதை உறுதி செய்தேன். அனைத்துத் துறை அதிகாரிகளிடம் ஒருங்கி ணைப்பைக் கொண்டு வர தீவிர மாக முயற்சி மேற்கொண்டேன். "வார இறுதி நாட்களில், அதிகாலை முதலே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளேன். என்னு டைய நடவடிக்கை ஒருவரை தண் டிக்க அல்ல; ஊக்குவிக்க மட் டுமே. எனக்கு, குறிப்பிட்ட பதவிக்காலம் உள்ளது. நான், 2018, மே 29ஆம் தேதி பதவியை விட்டு விலகுவேன்," என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மேலும் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!