நடுவானில் கலாட்டா செய்யும் பயணிக்கு உடனடி கைவிலங்கு

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும் வேளையில் சில்மிஷம் செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சில பயணிகள் தகாத செயல்களில் இறங்குவது உண்டு. வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் பயணிகளும் அதுபோன்ற மூர்க்கத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் கைவிலங்குகளைப் பயன்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தங்களது இருக்கையை விட்டு எழுந்திரா வண்ணம் அதுபோன்ற பயணிகளின் கைகளுக்கு விலங்கு பூட்டப்படும்.

"ஏற்கெனவே அனைத்துலக விமானங்களில் பயன் படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கை இனி உள்ளூர் விமானங்களுக்கும் நீட்டிக்கப்படும். ஒவ்வொரு விமானத் திலும் ஒரு ஜோடி கைவிலங்கு எனப்படும் கட்டுப்பாட்டுக் கருவி இருக்கும்," என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வனி லோஹானி தெரிவித்தார். "விமானத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்போடு விமானத்தின் பாதுகாப்பும் முக்கியமானது. இந்த அம்சத்தில் விட்டுக்கொடுக்கும் எண்ணம் எதுவும் கிடையாது," என்றார் அவர். அண்மையில், ஏர் இந்தியா விமானப் பயணத் தின்போது அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மானபங்கச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் கைவிலங்கு பூட்டுவதை விரிவுபடுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!