பணக்காரக் குழு பட்டியலில் மேன்யூ முதலிடம்

லண்டன்: ஆகப் பணக்காரக் காற் பந்துக் குழு பட்டியிலில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் முதலிடம் பிடித் துள்ளது. இதற்கு முன் முதலிடம் வகித்த ஸ்பானிய லீக் ஜாம்ப வானான ரியால் மட்ரிட்டை அது பின்னுக்குத் தள்ளியுள்ளது. ரியால் மட்ரிட் கடந்த 11 ஆண்டு ளாக ஆகப் பணக்காரக் காற் பந்துக் குழுவாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது மொத்த வருமானமாக 620.1 மில்லியன் பவுண்ட் பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது. 2015=2016ஆம் ஆண்டுக்கான பருவத்தில் யுனைடெட்டின் மொத்த வருமானம் இதுவரை இல்லாத அளவுக்கு 735 மில்லியன் அமரிக்க டாலருக்கு (1.05 பில்லியன் வெள்ளி) உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பட்டியலின் இரண்டாவது இடத்துக்கு ஸ்பானிய லீக்கின் பார்சிலோனா அணி முன்னேறி உள்ளது. அதன் மொத்த வரு மானம் 620.2 மில்லியன் பவுண்ட். நான்காவது இடத்தில் ஜெர் மனியின் பயர்ன் மியூனிக் குழு இருக்கிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி முதல்முறையாக ஆகப் பணக்காரக் காற்பந்துக் குழு பட்டியலின் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு சிட்டி தகுதி பெற்றதே இதற்குக் காரணம். ஆகப் பணக்காரக் காற்பந்துக் குழு பட்டியலில் முதல் இருபது இடம் வகிக்கும் குழுக்கள் இங் கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டி யிடுபவை. முதல் பத்து இடம் வகிக்கும் குழுக்களில் ஐந்து குழுக்கள் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!