தினகரன்: பொதுமக்களுக்கு எங்கள் மீது கோபமில்லை

சென்னை: "பொதுமக்கள் கோபம் அதிகமாகவில்லை. செயற்கையாக வலைத் தளங்களிலும் சமூக ஊட கங்களிலும் எதிரிகள் திட்ட மிட்டுப்பரப்பும் வதந்தி இது. மக்களின் கோபம் என்பது பொய்ப் பிரசாரம்," என்று தினகரன் சொன் னார். ராயப்பேட்டை அதிமுக அலு வலகத்தில் நேற்று முன்தினம் முறைப்படி துணைப் பொதுச் செய லாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

"தமிழக மக்களுக்காக குறிப் பாக ஏழை, எளிய மக்களுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சசிகலாவின் வழிகாட்டுதலில் இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறும். சட்ட மன்றத்தில் விதிகளுக்கு உட் பட்டுதான் பேரவைத் தலைவர் வாக்கெடுப்பை நடத்தினார். எப்படி யாவது கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் முயற்சித்தார். அவரது முயற்சியை அதிமுக உறுப்பினர்கள் தடுத்து விட்டனர். தோல்வியின் விரக்தி யில் ஸ்டாலின் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்," என்று தினகரன் குறிப்பிட்டார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!