நக்சல்கள் சுட்டுக் கொன்ற 25 பேரில் நால்வர் தமிழர்கள்

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நான்கு தமிழர்கள் உள்பட 25 மத்திய போலிஸ் படையினரை நக்சலைட் டுகள் சுட்டுக்கொன்ற சம்ப வத்தை ஈவு இரக்கமற்ற படு கொலை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கோழைத்தனமான தாக்குதல் என்று மோடியும் சாடியுள்ளனர். நக்சலைட்டுகள் தாக்குதலில் பி.அழகுபாண்டி, என்.செந்தில் குமார், என்.திருமுருகன், பத்ம நாபன் ஆகிய 4 தமிழக வீரர் களும் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். நக்சலைட்டுகள் கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களை மனி தக் கேடயமாகப் பயன்படுத்திய தையும் குற்றம் சாட்டி உள்ள ராஜ்நாத் சிங், போலிஸ் படை வீரர்களின் தியாகம் என்றும் வீண் போகாது. பழங்குடி மற்றும் ஏழை மக்களின் பெரிய எதிரியே நக்சலைட்டுகள்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "சுக்மா வில் பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்சல்கள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது, துக்கமளிப்பது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கல்," என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மத்திய போலிஸ் படையினரை ஹெலிகாப்டரில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்க கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!