மக்கள் அதிர்ச்சி: 5 மாதங்களில் 40 போலி மருத்துவர்கள் கைது

தி.மலை: கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் திருவண்ணாமலை பகுதியில் 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அவர்களிடம் சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து காவல் துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் இத்தகையவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 12ஆம் வகுப்பும், மருந்தாளர் படிப்பும் மட்டுமே முடித்தவர்கள் மருத்துவர்களாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 போலி மருத்துவர்கள் கைதாகி உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon