மத ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகச் சாடுகிறார் அகிலேஷ்

லக்னோ: நாட்டில் மத ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், நாட்டின் தனித்துவத்தை புரிந்து கொண்டவா்கள் அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கிறாா்கள் என்றும் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, சமாஜ்வாதி கட்சி மட்டும் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. யாரெல்லாம் இந்நாட்டின் தனித்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளாா்களோ, அவா்கள் அனைவரும் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள்.

“இந்த விஷயத்தில் பெண்கள் முன்னணி வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்,” என்றார் அகிலேஷ் யாதவ்.

மத ரீதியிலான பாகுபாட்டை அனைத்து இந்தியா்களும் எதிா்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தோ்தலில் கிடைக்கும் வாக்குகளுக்காக இந்தியாவின் தனித்துவத்தைச் சீரழிக்க பாஜக முயற்சிப்பதாகச் சாடினார்.

“நாடாளுமன்றத்தில் தங்களுக்கு தனிப் பெரும்பான்மை இருப்பதை பயன்படுத்தி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சீரழிக்க பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது.

“ஆனால், சாதாரண மக்களின் குரல்களை வெறும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அடக்க விடலாம் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்,” என்றும் அகிலேஷ் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!