திருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள்; கிராமத்தின் விசித்திர வழக்கம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம்.

அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். இது அவர்கள் பின்பற்றும் சமயச் சடங்கு இல்லை; ஆனால், இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாசாரம் என்று கூறப்படுகிறது.

அப்பகுதியில் முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். முதல் முதல் மனைவிக்கு குழந்தைகள் பிறக்காது எனக் கூறப்படுகிறது.

அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.

பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் அது தோல்வியிலேயே முடிந்தது என்கின்றனர் கிராமவாசிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!