மும்பையை விஞ்சிய டெல்லி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வரை இல்­லா­த­படி கொரோனா கிரு­மித்­தொற்­றில் முதன்­மு­த­லாக மும்பையை டெல்லி விஞ்சி இருக்­கிறது. புது­டெல்­லி­யில் இது­வரை இல்­லாத அள­வுக்கு வியா­ழனன்று புதி­தாக 1,513 பேரைக் கிருமி தொற்­றி­யது. மும்­பை­யில் இந்த அளவு 1,276 பேராக இருந்­தது.

புது­டெல்­லி­யில் கடந்த ஒரு வார கால­மா­கவே கிரு­மித்­தொற்று மிக அதி­க­மா­கக் கூடி வரு­கிறது. இது­வ­ரை­யில் அங்கு 23,645 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

டெல்­லி­யில் 9,500 பேருக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். ஒரு வாரத்­துக்கு முன் நில­வ­ரம் வேறு மாதி­ரி­யாக இருந்­தது. டெல்­லி­யில் நாள் ஒன்றுக்குக் கிருமி தொற்­றி­யோரின் எண்­ணிக்கை 500 முதல் 800 பேராக இருந்­தது.

அதே­வே­ளை­யில், மும்­பை­யில் இந்த எண்­ணிக்கை 1,200 பேருக்­கும் அதி­க­மாக இருந்­து வந்­தது.

ஆனால் கடந்த சில நாட்­களில் நிலைமை தலை­கீ­ழாக மாறி­விட்­டது. மும்­பை­யில் தொற்று குறைந்து வரும் வேளை­யில், டெல்­லி­யில் கூடி­வருகிறது. இந்­தி­யா­வி­லேயே அதி­கம் பாதிப்­புள்ள ஐந்து மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்று மிக வேக­மாக பரவி வரும் நக­ராக புது­டெல்லி இருக்­கிறது.

ஆகை­யால் நக­ருக்கு வரும் யாரும் அவர்­கள் எந்த வழி­யில் வந்­தா­லும் குறைந்­த­பட்­சம் ஒரு வாரத்­திற்கு வீட்­டி­லேயே தனித்து இருக்க வேண்­டும் என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

ஹரி­யா­னா­வு­டன் கூடிய எல்­லையை மூடி­விட வேண்­டும் என்­றும் புது­டெல்லி முடிவு செய்­து­விட்­டது. புது­டெல்­லி­யில் ஆம் ஆத்மி கட்சி எம்­எல்ஏ ராஜ்­கு­மார் ஆனந்­துக்­கும் அவ­ரு­டைய சகோ­த­ர­ருக்­கும் கிருமி தொற்றி இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் அந்த இரு­வ­ரும் வீட்­டில் தனி­மை­யில் இருக்­கி­றார்­கள் என்­றும் கட்சி வட்­டா­ரங்­கள் நேற்றுக் குறிப்­பிட்­டன.

இதேபோல, மே 1ஆம் தேதி இந்­தக் கட்­சி­யின் விசேஷ் ரவி என்ற எம்­எல்­ஏ­வுக்­கும் அவ­ரு­டைய சகோ­த­ர­ருக்­கும் கிரு­மித்­தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

இவ்­வே­ளை­யில், புது­டெல்­லி­யில் இருக்­கும் எல்லா கொவிட்-19 மருத்­து­வ­ம­னை­களும் நோயா­ளி­க­ளைக் கையா­ளும்­போது பின்­பற்ற வேண்­டிய ஒரே மாதி­ரி­யான வழி­காட்டி நெறி­மு­றை­களை டெல்லி அர­சாங்­கம் நேற்று வெளி­யிட்­டது.

இந்­நி­லை­யில், மும்பை, சென்­னை­யைப் போன்ற பெரு நக­ரம் என்­றா­லும் 1.2 கோடி மக்­கள் வசிக்­கும் பெங்­க­ளூ­ரு­வில் கிரு­மித்­தொற்று மிகமிகக் குறை­வாக இருக்­கிறது. அங்கு வெறும் 385 பேருக்­குத்­தான் கிருமி தொற்றி இருக்­கிறது என்­பது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!