199 பேருக்குத் தொற்று; தனியாக ஒதுக்கப்பட்ட கேரள கிராமம்

வய­நாடு: கேர­ள மாநிலம் வய­நாடு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட வலாடு கிரா­மத்­தைச் சேர்ந்த இரு குடும்பத்­ தி­ன­ரின் உற­வி­னர் ஒரு­வர் அண்­மை­யில் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­தார். கோழிக்­கோடு சென்று அவ­ரின் இறு­திச்­ச­டங்­கில் கலந்­து­கொண்டு திரும்­பிய அந்தக் குடும்பத்தாரை சோதித்தபோது ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­னது.

இதே­போல அங்­குள்ள மற்­றொரு குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கடந்த வாரம் திரு­மண நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­றார். அங்­கி­ருந்து திரும்­பிய அவ­ருக்­கும் கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டது.

இவர்­கள் மூலம் வலாடு கிரா­மத்­தில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரு­கிறது. இரு நாட்­க­ளுக்கு முன்பு வரை அங்கு 169 பேருக்கு தொற்று உறு­தி­யான நிலையில் வெள்­ளிக்­கி­ழமை மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வலாடு கிரா­மத்­தில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்­போது அந்­தக் கிரா­மம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இரவு பக­லாக கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.