கொவிட்-19: தீர்வு காண 11 அமெரிக்க-இந்திய ஆய்வாளர் குழுக்கள்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது உட்­பட கொவிட்-19க்கான புத்தாக்கத் தீர்வுகளைக் காண்­ப­தற்­காக இந்­தியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளைக் கொண்ட 11 குழுக்­கள் விரை­வில் பணி­க­ளைத் தொடங்க உள்­ளன.

தொற்றை விரை­வில் கண்­டு­பி­டிக்­கும் சோதனை முறை, கிரு­மிக்கு எதி­ரான சிகிச்சை, மாற்று மருந்­து­கள், செயற்கை சுவா­சக் கருவி ஆய்வு, கிரு­மி­நா­சினி இயந்­தி­ரங்­கள், உணர் கரு­வி­கள் பொருத்­தப்­பட்ட அறி­குறி கண்­ட­றி­யும் சாத­னங்­கள் போன்ற கொவிட்-19 தொடர்­பான ஆய்­வு­களை அவை மேற்­கொள்­ளும் என இந்­தி­யா­வின் அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க-இந்­திய அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப அறக்­கட்­டளை நிதி­யின் (USISTEF) ஆத­ர­வு­டன் இந்த ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட உள்­ளன.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடு­களும் இணைந்து இந்த நிதியை உரு­வாக்­கி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 சவாலை எதிர்­கொள்­ளும் வகை­யில் புது­மை­யான யோச­னை­களை முன்­வைக்­கும் 11 இரு­த­ரப்பு குழுக்­க­ளுக்கு USISTEF விரு­து­கள் வழங்­கப்­பட இருப்­ப­தா­க­வும் அதற்­கான புத்­தாக்க வரை­வு­களை தொழில் முனை­வர்­கள் சமர்ப்­பிக்­க­லாம் என­வும் அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப அமைச்­ச­கம் அறி­வித்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!