பெயரில் குளறுபடி; பிணை கிடைத்தும் 8 மாதங்களாக சிறையில் வாடிய ஆடவர்

இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் ஆட­வர் ஒரு­வ­ருக்­குப் பிணை கிடைத்­தும் அவர் விடு­விக்­கப்­ப­டா­மல் தொடர்ந்து எட்டு மாதங்­க­ளுக்­குச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

பிணை ஆணை­யில் அவ­ரது பெய­ரின் ஒரு பகுதி இடம்­பெ­ற­வில்லை என்­ப­தற்­காக அவ­ருக்கு இந்த அவ­ல­நிலை ஏற்­பட்­டது.

பிணை ஆணை­யில் வினோத் குமார் பாரு­வா­ருக்­குப் பதி­லாக வெறும் வினோத் பாரு­வார் என்று குறிப்­பி­டப்­பட்­டதை அடுத்து,

அந்­தக் கைதியை சித்­தார்த்­ந­கர் மாவட்ட சிறைக் கண்­கா­ணிப்­

பா­ளர் ராகேஷ் சிங் விடு­விக்க மறுத்­து­விட்­டார்.

இதையடுத்து, பிணை ஆணையில் தமது முழு பெயரைக் குறிப்பிட வினோத் பாருவார் விண்ணப்பித்தபோது சிறைக்

கண்­கா­ணிப்­பா­ள­ருக்கு அல­ஹா­பாத் உயர் நீதி­மன்­றம் எச்­ச­ரிக்கை விடுத்­தது.

சிறு விஷயத்துக்காக பிணை கிடைத்தும் வினோத் பாருவாரை விடுவிக்க மறுத்த சிறைக் கண்காணிப்பாளரை நீதிபதி சாடினார்.

அவ்வாறு அவரைச் சிறையில் தொடர்ந்து வைத்திருந்தது சட்டத்துக்கு விரோதமானது என்று நீதிபதி தெரிவித்தார்.

இனி இவ்­வாறு நடந்­து­கொள்­ளக்­கூ­டாது என்­றும் பிணைக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­ட­தும் சம்­பந்­தப்­பட்­ட­வரை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்­றும் அவ­ரி­டம் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!