மருத்துவமனையில் இடமில்லை; முதல்வர் வீட்டின்முன் போராட்டம்

பெங்­க­ளூரு: கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட கண­வ­ருக்குச் சிகிச்­சை­ய­ளிக்க பத்­துக்­கும் மேற்­பட்ட மருத்­து­வ­ம­னை­களை நாடி­யும் படுக்கை காலி­யாக இல்­லா­த­தால் வேத­னை­ய­டைந்த மனைவி விரக்­தி­யில் மாநில முதல்­வர் வீட்­டின் முன்­பாக போராட்­டத்­தில் ஈடு­பட்ட சம்­ப­வம் கர்­நா­டக மாநிலத்­தில் நிகழ்ந்­தது.

தக­வ­ல­றிந்து விரைந்து வந்த அதி­காரி­கள் உட­ன­டி­யாக அவ­சர மருத்­துவ ஊர்­திக்கு ஏற்­பாடு செய்­த­னர். ஆயி­னும், மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட வழி­யி­லேயே அந்த ஆட­வர் உயி­ரி­ழந்­து­விட்டார்.

இன்­னொரு சம்­ப­வத்­தில், கொரோனா நோயாளி ஒரு­வ­ரின் குடும்­பத்­தி­னர் பெங்­களூ­ரில் கர்­நா­டக சட்­ட­மன்­றத்­திற்கு வெளியே போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தம் தாயா­ரின் நிலை மிக­வும் மோச­ம் அடைந்து வரு­வ­தா­க­வும் ஆனா­லும் மருத்­து­வ­ம­னை­யில் இடம் கிடைக்­கா­மல் திண்­டாடி வரு­வ­தா­க­வும் அவ­ரின் மகள் சொன்­னார். இதைத் தொடர்ந்து, மாநில அர­சின் செய­லா­ளர் தலை­யிட்டு, மருத்­து­வ­ம­னை­யில் படுக்­கைக்கு எற்­பாடு செய்­தார்.

கர்­நா­டக மாநி­லத்­தில் நேற்று முன்­தினம் புதி­தாக 49,058 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது; மேலும் 328 பேர் இறந்­து­விட்­ட­னர்.

இதனிடையே, கொரோனா பர­வல் மோச­ம­டைந்து வரு­வதால், மாநி­லத்­தில் முடக்­க­நிலையை அறி­விப்பதைத் தவிர்க்க முடி­யா­மல் போக­லாம் என்று முதல்­வர் எடியூ­ரப்பா தெரி­வித்­து இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!