காபூலில் இருந்து இரவோடு இரவாக விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்திய தூதரக ஊழியர்கள்

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து இந்திய தூத­ரக ஊழி­யர்­கள் கடும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் தாய­கம் திரும்­பி­யுள்­ள­னர். இர­வோடு இர­வாக அவர்­களை இந்­திய அரசு மீட்­டது.

எந்த நேரத்­தி­லும் தங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சிய நிலை­யில், விமான நிலை­யம் செல்லும் வரை உயிர் பயத்தில் தவித்ததாக தூத­ரக ஊழி­யர்­கள் தெரி­வித்­த­னர்.

ஆப்­கா­னிஸ்­தானில் நிலைமை மோசமடைந்த நிலையில், தூத­ரக ஊழி­யர்­க­ளை­யும் அவர்­தம் குடும்­பத்­தா­ரை­யும் தாய­கம் அழைத்து வர மத்­திய அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. தலி­பான்­கள் காபூல் நக­ருக்­குள் நுழை­யும் முன்பே ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் விமா­னப்­படை விமா­னம் மூலம் மீட்கப்­பட்­ட­னர்.

மேலும் இரு­நூறு பேரை அழைத்து வர மற்­றொரு விமானம் காபூல் விமான நிலை­யத்­தில் காத்­தி­ருந்­தது. எனி­னும் இடைப்­பட்ட நேரத்­தில் காபூ­லும் தலி­பான்­கள் வசமானது.

இத­னால் இந்­திய தூத­ர­கத்­தில் இருந்து வெளி­யேற யாரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. தூத­ர­கத்­தைச் சுற்­றி­லும் துப்­பாக்கி ஏந்­திய தலி­பான்­கள் நிறுத்­தப்­பட்­ட­னர்.

இதனால் தலி­பான்­க­ளு­டன் இந்­திய அரசு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. இந்தக் கோரிக்­கையை தலி­பான்­கள் ஏற்றுக்­கொண்டனர்.

தூத­ர­கத்­தில் இருந்து இரு­ப­துக்­கும் மேற்­பட்ட வாக­னங்­கள், ஐந்து கிலோ மீட்­டர் தொலை­வில் இருந்த விமான நிலை­யத்­துக்கு பாது­காப்­பு­டன் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டது.

எனி­னும், எந்­நே­ர­மும் தாக்­கு­தல் நடக்­கக்­கூ­டும் என்று அஞ்சிய­தாகக் குறிப்­பிட்­டுள்ள தூத­ரக ஊழி­யர்­கள், ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­தைக் கடந்து விமான நிலை­யம் சென்­ற­டைய ஐந்து மணி­நே­ர­மா­னது என்­றும் அது­வரை உயி­ரைக் கையில் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­தா­க­வும் கூறு­கின்­ற­னர்.

"தலி­பான்­கள், இந்­திய அரசு ஆகிய இரு­த­ரப்­புக்­கும் இடையே காலை முதல் மாலை இருள் சூழும் வரை பேச்­சு­வார்த்தை நீடித்­தது. இரவு நெருங்­கும்­போ­து­தான் உடன்­பாடு ஏற்­பட்­டது.

"அதன் பிறகு ஐந்து மணி நேர பய­ணத்­துக்­குப் பின்­னர் இந்­தி­யர்­கள் விமான நிலை­யம் சென்­ற­டைந்­த­னர்.

பின்­னர் இர­வோடு இர­வாக அவர்­கள் விமா­னப்­படை விமா­னம் மூலம் தாய­கம் அழைத்து வரப்­பட்­ட­னர்," என்று ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருள்­க­ளுக்கு தலி­பான்­கள் தடை­வி­தித்­துள்­ள­னர். இந்­தி­யா­வில் இருந்து ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு உணவு, மருந்து பொருள்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வந்­தன. அவற்­றின் மதிப்பு சுமார் ரூ.3,800 கோடி­யா­கும்.

தடை விதிக்­கப்­பட்­ட­தால் இனி, தேயிலை, காபி, மசாலா பொருள்­கள், தொழில்­நுட்ப சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை இந்­திய வர்த்­த­கர்­க­ளால் ஏற்­று­மதி செய்ய இய­லாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!