காபூலில் இருந்து ஒரே நாளில் 400 பேர் மீட்கப்பட்டனர்

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்­கும் பணி துரித கதி­யில் நடை­பெற்று வரு­கிறது. நேற்று மட்­டும் 329 பேர் மீட்­கப்­பட்­ட­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் ஏர் இந்தி­யா­வின் சிறப்பு விமா­னம் மூலம் டெல்லி வந்­த­டைந்­த­னர்.

காபூல் விமான நிலை­யம் இப்­போது அமெ­ரிக்­கப் படை­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது. இதை­யடுத்து அமெ­ரிக்­கத் தரப்­பு­டன் இந்­திய அரசு மேற்­கொண்ட பேச்சு­வார்த்தையை அடுத்து, காபூல் விமான நிலை­யத்­தில் இருந்து தின­மும் இரண்டு விமா­னங்­களை இந்­தியா இயக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

காபூ­லில் மட்­டும் தற்­போது 1,200க்கும் மேற்­பட்ட இந்­திய குடி­மக்­கள் நாடு திரும்ப காத்­தி­ருக்­கின்­ற­னர். இந்­நி­லை­யில் நேற்று ஒரே நாளில் காபூ­லில் இருந்து இரண்டு நேப்­பாள குடி­மக்­கள் உட்­பட 329 பேர் மூன்று விமா­னங்­கள் மூலம் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே தலி­பான்­களுக்கு ஆத­ர­வாக சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டு­வோர் மீது பல்­வேறு மாநில அர­சு­களும் கடும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

அசாம் மாநி­லத்­தில் இது தொடர்­பாக 14 பேர் கைதா­கி­னர். பெங்­க­ளூ­ரு­வில் ஆட­வர் ஒரு­வர் கைதா­ன­தாக கர்­நா­டகா காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே ஆப்­கா­னிஸ்­தான் நில­வ­ரத்­து­டன் காஷ்­மீர் விவ­கா­ரத்தை ஒப்­பிட்டு, முன்­னாள் முதல்­வர் மெக­பூபா முஃப்தி தெரி­வித்­துள்ள கருத்­துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அண்டை நாட்­டில் என்ன நடந்துகொண்­டி­ருக்­கிறது என்­பதை கவ­னிக்­கும் இந்­திய அரசு, சூழ்­நி­லை­யைப் புரிந்துகொண்டு ஜம்மு, காஷ்­மீர் விவ­கா­ரத்தை சரி செய்ய வேண்­டும் என மெக­பூபா முஃப்தி கூறி­ய­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

"இந்­திய அரசு சட்­ட­வி­ரோ­த­மாக, அர­சி­ய­லைப்புச் சட்­டத்­திற்கு எதி­ராக ஜம்மு காஷ்­மீ­ரின் அடை­யாளத்தைப் பறித்­துக்கொண்­டது. இந்த தவற்­றைத் திருத்­திக் கொள்ள இன்­னும் வாய்ப்பு உள்­ளது," என மெக­பூபா முஃப்தி தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு பாஜக தரப்­பில் கடும் கண்­ட­னம் எழுந்­துள்­ளது. வெறுப்பு அர­சி­ய­லில் ஈடு­படும் மெக­பூபா முஃப்தி போன்­ற­வர்­கள் மீதும் இந்தி­யா­வுக்கு எதி­ராக சதி செய்­ப­வர்­கள் மீதும் கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அக்­கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!