டெல்லி விமான நிலையத்தில் ரயில் நிலையம் போல் கூட்டம்

பரிசோதனை முடிவுக்காக ஒரு நாளுக்கும் மேல் காத்திருக்கும் பயணிகள்

புது­டெல்லி: பல்­வேறு நாடு­களில் இருந்து நாடு திரும்­பும் பய­ணி­க­ளால் டெல்­லி­யில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யம் இப்­போது ரயில் நிலை­யம்­போல் காட்­சி­ய­ளிப்­ப­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

தொற்று அபா­ய­முள்ள நாடு­களில் இருந்து இந்­தியா வரும் அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கும் கொரோனா பாதிப்பு உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றிய பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

இந்­தப் பரி­சோ­தனை முடிவு கிடைக்க பல மணி நேரம் ஆகிறது என்­றும் இதன் கார­ண­மா­கவே விமான நிலை­யத்­தில் ஏரா­ள­மான பய­ணி­கள் காத்­தி­ருக்க நேரி­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த இரு தினங்­க­ளாக சில பய­ணி­கள் 24 மணி நேரத்­தை­யும் கடந்து விமான நிலை­யத்­தி­லேயே காத்­தி­ருப்­ப­தாக ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது. இது­கு­றித்து தக­வல் அறிந்த மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதிர் ஆதித்ய சிந்­தியா, உட­ன­டி­யா­கக் கள­மி­றங்கி, பய­ணி­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­க­ளைக் களைய நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து பய­ணி­கள் குடி­நுழைவுச் சோத­னை­கள் தொடர்­பில் எட்டு வகை­யான வச­தி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அன்­றாட விமா­னப் போக்­கு­வ­ரத்­தும் நெருக்­கடி இன்றி நடை­பெற தனது அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாகவும் டுவிட்­டர் பக்­கத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் அனைத்து விமான நிலை­யங்­களும் தற்­போது மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் நேர­டிக் கண்­காணிப்­பில்­ உள்­ள­தா­க­வும் அன்­றாட சூழ்­நி­லைக்கு ஏற்ப சில ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும் என்­றும் அமைச்­சர் ஜோதிர் ஆதித்ய சிந்­தியா மேலும் கூறி­யுள்­ளார்.

புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்ள ஓமிக்­ரான் பாதிப்பு இப்­போது இந்­தி­யா­வை­யும் எட்டி­உள்­ளது. இத­னால் தொற்­றுப் பாதிப்பு பர­வா­மல் கட்­டுப்­ப­டுத்த, வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு விமான நிலை­யங்­க­ளி­லேயே கொரோனா தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

இதன் கார­ண­மா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்­சின் வழி­காட்­டும் நெறி­மு­றை­களை முழு­மை­யா­கப் பின்­பற்­று­வ­தா­லும், விமான நிலை­யங்­களில் பய­ணி­கள் கூட்­டம் அதி­க­ரித்து வரு­கிறது என அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்லி விமான நிலை­யத்­தில் பய­ணி­களை வர­வேற்க வந்த உற­வி­னர்­கள் நண்­பர்­கள் கூட்­ட­மும் அதி­க­ரித்­துள்­ளது. தொற்­றுக்­குப் பயந்து அவர்­களில் பலர் விமான நிலை­யத்­துக்கு வெளியே சாலை­யோ­ரங்­களில் மணிக்­க­ணக்­கில் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

இதற்­கி­டையே ஓமிக்­ரான் பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டால், சம்­பந்­தப்­பட்ட நோயா­ளி­களை பொது­வான கொரோனா வார்­டில் அனு­ம­திக்­கக் கூடாது என்­றும் ஓமிக்­ரான் நோயா­ளி­க­ளுக்கு என முற்­றி­லும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிகிச்சை பிரிவை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­றும் மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய சுகா­தார அமைச்சு அனைத்து மாநில தலை­மைச் செய­லா­ள­ருக்­கும் கடி­தம் அனுப்பி உள்­ளது.

கர்­நா­ட­கா­வில் ஓமிக்­ரான் பாதிப்­புள்ள பய­ணி­க­ளுக்கு மட்­டுமே சிகிச்சை அளிப்­ப­தற்­கான இரண்டு மருத்­து­வ­ம­னை­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. அவற்­றில் ஒன்று பெங்­க­ளூ­ரி­லும் மற்­றொன்று மங்க­ளூ­ரி­லும் உள்­ளன. கர்­நா­டக மாநி­லத்­தில் அவ்­விரு நக­ரங்­க­ளி­லும்­தான் அனைத்­து­லக விமான நிலை­யங்­கள் உள்­ளன.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 9,419 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. மேலும், 159 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நோயாளி குணமடைந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!