தீவிரவாத தாக்குதல்: பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த மும்பை

காவல்துறை தீவிர கண்காணிப்பு: பாதுகாப்புப் பணியில் 3,000 போலிசார்

புது­டெல்லி: தீவி­ர­வாத தாக்­கு­தல் தொடர்­பாக மத்­திய உள­வுத்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­ததை அடுத்து, மும்பை மாந­க­ரம் முழு­வ­தும் பாது­காப்புப் படை­யி­ன­ரின் கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

மூவா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான காவல்துறையினர் பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். சில இடங்­களில் துணை ராணு­வப் படை­யி­னர் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

புத்­தாண்­டை­யொட்டி பொது­மக்­கள் கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­டும்­போது காலிஸ்தான் தீவி­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்த வாய்ப்­புள்­ள­தாக உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் பஞ்­சாப் மாநிலம், லூதி­யா­னா­வில் உள்ள நீதி­மன்­றத்­தில் காலிஸ்­தான் தீவி­ர­வா­தி­கள் வெடி­குண்டை வெடிக்­கச் செய்ததில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். சிலர் காய­ம­டைந்­த­னர்.

இந்­நி­லை­யில், காலிஸ்­தான் தீவிர­வா­தி­களின் அடுத்த இலக்­காக மும்பை மாந­க­ரம் இருக்­கக்­கூ­டும் என உள­வுத்­துறை கூறி­யுள்­ளது.

இதை­ய­டுத்து மும்பை மாந­க­ரில் உள்ள அனைத்து காவல் நிலை­யங்­களும் தங்­கள் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் தீவிர கண்­கா­ணிப்பி­லும் சுற்­றுக்­கா­வல் பணி­யி­லும் ஈடு­பட வேண்­டும் என மாநில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

காவல் ஆணை­யர்­கள், காவல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள், ஆய்­வா­ளர்­கள் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

மேலும், விடுப்­பில் உள்ள காவ­லர்­கள் அனை­வ­ரும் உட­ன­டி­யா­கப் பணிக்­குத் திரும்ப வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மும்பை முழு­வ­தும் இன்று புத்­தாண்டு கொண்­டாட்­டங்­க­ளுக்கு பொது இடங்­களில் மக்­கள் அதிக அள­வில் கூட வாய்ப்பு உள்­ள­தாக மாந­கர காவல் ஆணை­யர் கைசர் காலிட் கூறி­யுள்­ளார்.

இந்­தக் கொண்­டாட்­டங்­களை சீர்­கு­லைக்­கும் வகை­யில் காலிஸ்தான் ஆத­ரவு பயங்­க­ர­வா­தி­கள் தாக்கு­தல் நடத்த வாய்ப்­புள்­ள­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகை­யில் குறிப்­பிட்­டார்.

"இது தொடர்­பாக ரகசியத் தகவல் கிடைத்­துள்­ளது. பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்டுள்ளன.

"மும்­பை­யில் உள்ள முக்­கிய ரயில் நிலை­யங்­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ரயில்வே போலி­சார் பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்," என்று ஆணையர் கைசர் காலிட் மேலும் தெரி­வித்­தார்.

காஷ்­மீ­ரில் கடந்த இரு தினங்களில் மட்­டும் ஒன்­பது பயங்­க­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

ஸ்ரீந­க­ரில் பயங்­க­ர­வா­தி­கள் பதுங்கி இருப்­ப­தா­கக் கிடைத்­த தக­வலை அடுத்து பாது­காப்பு படை­யி­னர் தேடு­தல் வேட்டை நடத்­தி­னர். அப்­போது இரு வெவ்­வேறு இடங்­களில் இரு­த­ரப்­புக்­கும் இடையே நீண்ட நேரம் துப்­பாக்­கிச் சண்டை நடந்­தது.

இதில் அனந்த்­நாக் பகு­தி­யில் ஆறு பயங்­க­ர­வா­தி­களும் ஸ்ரீந­க­ரில் மூன்று பேரும் பலி­யா­கிவிட்ட­னர். பாது­காப்புப் படை அதி­காரி ஒரு­வர் வீர மர­ணம் அடைந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!