மூன்றாண்டுகளில் 22 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு

மூன்றாண்டுகளில் 22 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு

1 mins read
8ced7cba-0f7c-4e2d-afa9-291ff5123f84
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த மூன்று ஆண்­டு­களில் 22 லட்­சத்து 54,000 பேர் புற்­று­நோ­யால் மர­ணம் அடைந்­துள்­ள­தாக நாடாளுமன்­றத்­தில் மத்­திய சுகா­தா­ர அமைச்­சர் மன்சுக் மாண்­ட­வியா அதிர்ச்­சித் தக­வலை வெளி­யிட்­டுள்­ளார்.

கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டுவரை இந்­தி­யா­வில் 40 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் ஏறக்­கு­றைய 22 லட்­சம் பேர் உயி­ரி­ழந்­த­னர் என்ற தக­வலை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக மக்­க­ள­வை­யில் மன்­சுக் மாண்­ட­வியா கூறு­கை­யில், "புற்­று­நோய் என்­பது பல்­வேறு கார­ணி­க­ளால் ஏற்­படுகிறது. குறிப்­பாக, உயர்ந்து வரும் மக்­கள் தொகை, அமர்ந்த நிலையிலான வாழ்க்கை முறை, புகை­யிலைப் பொருள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­தல், மது அருந்­து­தல், காற்று மாசு­பாடு ஆகிய கார­ணி­களால் புற்­று­நோய் ஏற்­ப­டு­கிறது.

"இந்­தி­யா­வில் கடந்த மூன்று ஆண்­டு­களில் மொத்­தம் 40,75,826 பேர் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டனர். இவர்­களில் 22,54,886 பேர் புற்­று­நோ­யால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

"ஆரோக்கிய நடவடிக்கைகள், தகவல் தொடர்புகளை மேம்படுத்து வதன் மூலம் புற்றுநோயைத் தடுக் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.