கொவிட்-19 சிகிச்சைக்கான மருந்தைத் தயாரிக்கும் 19 இந்திய நிறுவனங்கள்

ஹைத­ரா­பாத்: இந்­தி­யா­வைச் சேர்ந்த 19 மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், கொவிட்-19 சிகிச்­சை­யில் பயன்­ப­டக்­கூ­டிய நிர்­மாட்­ரெல்­விர் எனும் மருந்­தைத் தயா­ரிக்க ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளன.

ஃபைசர் நிறு­வ­னத்­தின் இந்த மருந்து, நோயா­ளி­கள் வாய்­வ­ழியே உட்­கொள்­ளக்­கூ­டி­யது.

ரிடோ­ன­விர் மருந்­து­டன் சேர்த்து கொவிட்-19 நோயைக் குணப்­ப­டுத்த இத­னைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும்.

நிர்­மாட்­ரெல்­விர் மருந்­தைத் தயா­ரிப்­ப­தற்கு உல­கின் 12 நாடு­க­ளைச் சேர்ந்த மொத்­தம் 35 மருந்துத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் துணை உரி­மத்­திற்­குக் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

இந்­தி­யா­வின் 19 நிறு­வ­னங்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய அவை, ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் ஆத­ர­வைப் பெற்­றுள்ள மருந்­துக் காப்­பு­ரி­மைக் குழு­வு­டன் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

தயா­ரிக்­கப்­படும் மருந்­து­கள் குறைந்த மற்­றும் நடுத்­தர வரு­வாய் கொண்ட 95 நாடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வும் அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளது.

35 நிறு­வ­னங்­களில் ஆறு, மருந்­துக்­கான மூலப்­பொ­ருள் தயா­ரிப்­பில் ஈடு­படும்; ஒன்­பது நிறு­வ­னங்­கள் மருந்­தைத் தயா­ரிக்­கும்.

எஞ்­சிய 20 நிறு­வ­னங்­கள் இரு­வ­கைச் செயல்­பா­டு­க­ளி­லும் ஈடு­படும்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் அன்­றாட கொவிட்-19 நோய்த் தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்­து­ வ­ரு­கிறது.

புதி­தாக 2,528 பேருக்கு பாதிப்பு உறு­தி­யா­ன­தாக நேற்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­க­ளை­யும் சேர்த்து நாட்­டில் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 4.30 கோடி­யைத் தாண்­டி­யது.

இவ்­வே­ளை­யில், உல­கின் மற்ற நாடு­களை விட ஓமிக்­ரான் ரகக் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை இந்­தியா சிறப்­பாக கையாண்­டி­ருப்­ப­தாக மத்­திய சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

ஓமிக்­ரான் ரகக் கிரு­மிப் பர­வல் உல­க­ளா­விய நிலை­யில், 6 மடங்கு உச்­சத்­திற்­குச் சென்­றது.

ஆனால் மற்ற நாடு­களை விட இதனை இந்­தியா சிறப்­பாக கையாண்­டது.

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் மற்­றும் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை முந்­தைய அலை­களை விடக் குறைவு என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!