கல்லூரி விடுதியில் சைவ உணவு அளிக்க வற்புறுத்தி தாக்குதல்

ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு பல்கலைக்கழகத்தில் வன்முறை

புது­டெல்லி: ஆர்­எஸ்­எஸ் அமைப்­பின் கிளை அமைப்­பான அகில பார­திய வித்­யார்த்தி பரி­ஷத் (ஏபி­விபி), டெல்லி ஜவ­கர்­லால் பல்­க­லைக் கழ­கத்­தின் காவேரி உணவு விடு­தி­யில் புகுந்து, ராம நவ­மிக்கு சைவ உணவை மட்­டுமே சமைத்­துப் பரி­மாற வேண்­டும் என்­றும் விடு­தி­யில் அசைவ உண­வு­களை வழங்­க­வி­டா­மல் தடுத்து கூச்­ச­லிட்டு வன்­மு­றைத் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­னர்.

இந்­தத் தாக்­கு­த­லால் மாண­வர்­கள் இரு பிரி­வி­ன­ரா­கப் பிரிந்து மோதிக்­கொண்­ட­னர்.

இந்த மோத­லில் 60 பேர் வரை காய­ம­டைந்து உள்­ள­னர் என கூறப்­ப­டு­கிறது.

இது­பற்றி டெல்லி ஜவ­கர்­லால் நேரு பல்­கலைக் கழ­கத்­தின் மாண­வர் அமைப்பு நேற்று மாலை வெளி­யிட்ட அறிக்கையில், அவர்­கள் (அகில பார­திய வித்­யார்த்தி பரி­ஷத்) தடி­கள், பூந்­தொட்­டி­கள் ஆகி­ய­வற்றைக் கொண்டு எங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர்.

"காவல்­து­றை­யி­டம், மாலை­யில் வன்­முறை நிக­ழக்­கூ­டும் என முன்பே தக­வல் தெரி­வித்து இருந்­தோம். எனி­னும், எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.

"வன்­முறை சம்­ப­வம் நடந்­த­போது கூட, காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் முன்­னி­லை­யி­லேயே அவர்­கள் எங்­களை மிரட்­டி­னார்­கள். ஆனால், எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

"பல்­க­லைக் கழக நிர்­வா­க­மும் கண்­ட­னம் தெரி­விக்­க­வில்லை," என்று தெரி­வித்து உள்­ளது.

ஏபி­விபி அமைப்­பின் உறுப்­பி­னர்­கள், கல்­லூரி விடு­தி­யின் இரவு உண­வுப்பட்­டி­யலை மாற்­றக் கோரி­யும், அதில் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் வழக்­க­மாக வழங்­கப்­படும் அசைவ உண­வு­க­ளைத் தவிர்க்க வேண்­டும் என்றும் உணவு விடு­திக் குழு உறுப்­பி­னர்­களை வற்­பு­றுத்­தித் தாக்­கி­னர். கல்­லூ­ரி­யில் இயங்­கும் விடு­தி­கள் எல்லா இனத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கும் பொது­வான இட­மா­கும். அதை ஒரு குறிப்­பிட்ட பிரி­வி­னர் மட்­டும் சொந்­தம் கொண்­டாட முடி­யாது," என்று கல்­லூரி அதற்கு மறுத்துவிட்­டது.

இந்­நி­லை­யில், ஏபி­விபி அமைப்­பைச் சாராத மாண­வர்­கள் சிலர், ராம­ந­வ­மியை முன்­னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி உணவு விடுதி­யில் வழி­பாட்டு நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

இந்த வழி­பாட்­டில் ஏரா­ள­மான ஜேஎன்யு மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இதற்கு இட­து­சாரி மாண­வர்­கள் எதிர்ப்பு தெரி­வித்து, வழி­பாட்டை நடத்­த­வி­டா­மல் தடுத்­த­னர்.

இந்த வழி­பாட்­டைத் தடுப்­பதே அவர்­க­ளது உண்­மை­யான நோக்­கம் என்­றும் உணவு உரிமை விவ­கா­ரத்­தில் பொய்­யான சல­ச­லப்பை உரு­வாக்­கி­யுள்­ள­னர் என்­றும் கூறப்படுகிறது. ஏபி­விபி அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­கள் மீது கல்­லூ­ரி­யும் அதன் விடுதி நிர்­வா­க­மும் அளித்த புகாரை ஏற்று காவல்­து­றை­யி­னர் ஏபி­விபி அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் மீது வழக்­குப் பதிவு செய்­துள்­ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!