குரங்கம்மை தொற்றைக் கண்டறிய புதிய கருவி

புது­டெல்லி: குரங்­கம்மை தொற்று பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தற்­கான புதிய கரு­வியை இந்­திய நிறு­வ­னம் ஒன்று உரு­வாக்கி உள்­ளது.

உல­கம் முழு­வ­தும் குரங்­கம்மை தொற்று குறித்து மக்­கள் பீதி­ய­டைந்­துள்­ள­னர். இது­வரை பெரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­த­வில்லை என்­றா­லும், உலக சுகா­தார அமைப்பு, அமெ­ரிக்க அரசு உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர் உலக மக்­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, குரங்­கம்மை தொற்று பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தற்­கான புதிய கரு­வியை உரு­வாக்கி உள்­ள­தாக சென்­னையை மைய­மா­கக் கொண்டு செயல்­படும் ட்ரி­விட்­ரான் ஹெல்த் கேர் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

'ஆர்டி-பிசி­ஆர்' வகை பரி­சோ­த­னைக் கரு­வி­யான இதன் மூலம் குரங்­கம்மை பாதிப்பை எளி­தில் கண்­ட­றிய முடி­யும் என அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

"ஒரு­வ­ரது உட­லில் கிருமி இருந்­தால் சுமார் ஒரு மணி நேரத்­துக்­குள் இக்கருவி உறுதி செய்­யும். மேலும், சின்­னம்மை, குரங்­கம்­மைக்கு இடையே உள்ள வித்­தி­யா­சத்­தை­யும் உணர்ந்து பரி­சோ­தனை முடி­வை தெரி­விக்­கும்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் இது­வரை யாருக்­கும் குரங்­கம்மை பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது. எனி­னும், உலக அள­வில் பாதிப்பு அதி­க­ரிப்பதால் எத்­த­கைய சூழ­லை­யும் எதிர்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக அம்­மன்­றம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!