குரங்கம்மை: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வரை குரங்­கம்மை பாதிப்பு கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றா­லும், நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஏது­வாக வழி­காட்டி நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது மத்­திய சுகா­தார அமைச்சு.

அதில், குரங்கம்மை பாதிப்பு உள்­ள­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும்­போது அதற்­கான பாது­காப்பு நடை­மு­றை­கள், உரிய பாது­காப்புக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, நோய் பாதிப்பு உள்­ள­வர்­கள் பயன்­ப­டுத்­திய பொருள்­களை வேறு யாரும் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்­றும் கண் எரிச்­சல், கண் வலி, பார்வை மங்­கு­வது, மூச்சு விடு­வ­தில் சிர­மம், நெஞ்­சு­வலி உள்­ளிட்ட அறி­கு­றி­கள் தென்­பட்­டால் பொது­மக்­கள் உட­ன­டி­யாக மருத்­து­வரை அணு­கிப் பரி­சோ­தனை செய்து கொள்­ள­வேண்­டும் என்­றும் சுகா­தார அமைச்சு அறி­வு­றுத்தி உள்­ளது.

பாதிப்பு மேற்­கொண்டு பர­வு­வதை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் தனி­மைப்­ப­டுத்­த­லும் ஒன்று என்­றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், பாதிப்பு உள்ள பகு­தி­கள் இயன்ற விரை­வில் அடை­யா­ளம் காணப்­பட வேண்­டும் என்­றும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

பாதிப்பு உள்­ள­வர்­க­ளு­டன் நெருக்­க­மான தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண்­ப­தும் அவர்­க­ளைக் கண்­கா­ணிப்­பதும் மிக அவ­சி­யம் என்று குறிப்­பிட்­டுள்ள சுகா­தார அமைச்சு, சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளின் மாதி­ரி­களை புனே­வில் உள்ள தேசிய ஆய்­வுக்­கூ­டத்­துக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்­டும் என தெரி­வித்­துள்­ளது.

"நோயா­ளி­க­ளுக்­கும் வீட்­டுத் தனி­மை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­கும் சிகிச்சை அளிக்­கும் சுகா­தார பணி­யா­ளர்­கள் தங்­கள் கைக­ளைச் சுத்­த­மாக வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம். முழுக் கவச உடை அணிய வேண்­டும்.

"அது­போல், குரங்­கம்மை பாதித்த நாடு­க­ளுக்குச் சென்று வந்து அறி­கு­றி­க­ளு­டன் காணப்­படும் நோயா­ளி­களை அனைத்து மருத்­து­வ­ம­னை­களும் உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்க வேண்­டும். மாநில அர­சு­கள் கண்­கா­ணிப்பு மையத்தை ஏற்­ப­டுத்தி கண்­கா­ணிக்க வேண்­டும்," என்­றும் சுகா­தார அமைச்சு தனது வழி­காட்டி நெறி­மு­றை­களில் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், மாநி­லத்­தில் ஒரு­வ­ருக்கு குரங்­கம்மை நோய் கண்­ட­றி­யப் பட்­டா­லும் அது எப்­படி பர­வி­யது, நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர் எங்­கி­ருந்து வந்­தார் என்­பன போன்ற தக­வல்­களை உட­ன­டி­யாக சேக­ரிக்க வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு அன்­றாட கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. அங்கு செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் 1,197 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யது. அம்­மா­நி­லத்­தில் கொரோனா தொற்­றுப் பாதிப்­புக்­காக தற்­போது 5,728 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். செவ்­வாய்க்­கி­ழமை நாடு முழு­வ­தும் புதி­தாக 2,745 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­உள்­ள­னர்.

கேரளாவில் ஒரே நாளில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!