கடத்தி வரப்பட்ட 12 சிறுமிகள் மீட்பு

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னில் இருந்து கேர­ளா­வுக்கு கடத்தி வரப்­பட்ட 12 சிறு­மி­கள் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர். இது தொடர்­பாக மூன்று பேர் கைதாகி உள்­ள­னர்.

குஜ­ராத்­தில் இருந்து புறப்­பட்ட பய­ணிகள் ரயில் ஒன்று நேற்று முன்­தி­னம் கேரள மாநி­லம் கோழிக்­கோடு ரயில் நிலை­யத்தை வந்­த­டைந்­தது. அதில் இருந்து 12 சிறு­மி­களும் நான்கு பெரி­ய­வர்­களும் இறங்கி, வெளியே செல்ல முயன்­ற­னர்.

எனி­னும் அவர்­க­ளது நட­வ­டிக்­கை­க­ளைக் கண்டு சந்தேக­ம­டைந்த அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்தி விசா­ரணை மேற்­கொண்­ட­னர். முன்­ன­தாக ரயில் பய­ணி­கள் சில­ரும்­கூட காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

அவர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட. விசா­ர­ணை­யின்­போது, எர்­ணா­கு­ளம் மாவட்­டம் பெரும்­பா­வூ­ரில் உள்ள ஒரு தனி­யார் ஆத­ர­வற்­றோர் காப்­ப­கத்­திற்கு சிறு­மி­களை அனு­ம­தி­யின்றி அழைத்து செல்­வது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து சிறு­மி­க­ளு­டன் வந்த நான்கு பேரும் கைதா­கி­னர். அவர்­களில் இரு­வர் குழந்­தை ­களைக் கடத்­தும் இடைத்­த­ர­கர்­கள் என்­றும் மற்ற இரு­வ­ரும் கடத்தி வரப்­பட்ட இரு சிறு­மி­க­ளின் பெற்­றோர் என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

சிறு­மி­கள் அழைத்­துச் செல்­லப்­பட இருந்த காப்­ப­கத்தை ஜேக்­கப் வர்­கீஸ் என்ற பாதி­ரி­யார் நடத்தி வரு­கி­றார். இதை­ய­டுத்து அவ­ரும் காவல்­து­றை­யி­டம் சிக்­கி­னார்.

விரி­வான விசா­ர­ணைக்­குப் பின்­னர் சிறு­மி­க­ளு­டன் வந்த பெற்­றோர் மட்­டும் விடு­விக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இந்தக் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!