ஐநாவில் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி

நியூ­யார்க்: ஐக்­கிய நாடு­கள் (ஐ.நா) சபை­யின் தலை­மை­ய­கத்­தில் பிர­த­மர் மோடி தலை­மை­யில் யோகா நிகழ்ச்சி நடை­பெ­று­கிறது.

யோகா பயிற்­சி­யால் ஏற்­படும் பல நன்­மை­கள் குறித்து உலக அள­வில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் இம்­மா­தம் 21ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடை­பெ­று­கிறது.

ஜூன் 21ஆம் தேதியை யோகா தின­மாக அறி­விக்க வேண்­டும் என்ற இந்­தி­யா­வின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட ஐநா, ஒவ்வோர் ஆண்­டும் ஜூன் 21ஆம் தேதி உலக முழு­வ­தும் யோகா தின­மா­கக் கொண்­டா­டப்­படும் என்று 2014 டிசம்­ப­ரில் அறிவித்­தது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்கா செல்­லும் பிர­த­மர் மோடி, ஐ.நா. தலை­மை­ய­கத்­தில் நடை­பெ­றும் 9வது அனைத்­து­லக யோகா தின நிகழ்ச்­சி­க்கு தலை­மை ஏற்பார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்­து­லக யோகா தினம் அறி­விக்­கப்­பட்டு ஒன்­பது ஆண்­டு ­க­ளுக்­குப் பிறகு ஐ.நா.வில் நடை­பெ­றும் யோகா நிகழ்ச்­சிக்கு பிர­த­மர் மோடி தலை­மை­யேற்­பது இது முதல்­முறை.

ஐநா சபை­யின் தலை­மை­ய­கத்­தில் உள்ள வடக்கு புல்­வெ­ளி­யில் ஜூன் 21ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 9 மணி வரை அனைத்­து­லக யோகா அமர்வு நடை­பெ­ற­வுள்­ளது.

இதில், ஐநா உயர் அதி­கா­ரி­கள், பல்­வேறு நாடு­க­ளின் தூதர்­கள், ஐ.நா. உறுப்பு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள், உல­க­ளா­விய புலம்­பெ­யர் சமூ­கத்­தின் முக்­கிய உறுப்­பி­னர்­கள் உட்­பட பலர் பங்­கேற்­பார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிர­த­மர் மோடிக்கு 22ஆம் தேதி­யன்று வெள்ளை மாளி­கை­யில் பாரம்­ப­ரிய முறைப்­படி வர­வேற்பு அளிக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடனை திரு மோடி சந்­திக்­கி­றார். அப்­போது உக்­ரேன் போர் குறித்து முக்­கி­ய­மாக பேசப்­படும் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும் வகையில் முக்­கிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­க­வி­ருக்­கின்­றன.

ஜூன் 22ஆம் மாலை­யில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் அவ­ரது மனைவி ஜில் பைட­னும் பிர­த­மரை கௌர­விக்­கும் வகை­யில் விருந்­த­ளிக்­கின்­ற­னர்.

அடுத்த நாள் 23ஆம் தேதி அமெ­ரிக்க துணை அதி­பர் கமலா ஹாரீ­சும், அமெ­ரிக்க வெளி­யு­றவுத் துறை அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­க­னும் மோடிக்கு மதிய விருந்­த­ளிக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

பிர­த­மர் மோடி தனது அமெரிக்கப் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக முக்­கிய நிறு­வ­னங்­க­ளின் தலைமைச் செயல் அதி­கா­ரி­கள், தொழில் நிபு­ணர்­கள் உள்­ளிட்­டோ­ரு­டன் மோடி கலந்­து­ரை­யாட உள்­ளார். இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் அவர் சந்­திக்­கி­றார். அமெ­ரிக்க பய­ணத்தை முடித்­துக்கொண்டு பிர­த­மர் மோடி எகிப்து செல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!