மோடி-பைடன் சந்திப்பில் ஐந்து அம்சங்களுக்கு முக்கியத்துவம்

தரண்ஜித் சிங் சாந்து: அமெரிக்காவில் கல்வி கற்கும் இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள்

வாஷிங்­டன்: பிர­தமா் நரேந்­திர மோடி-அமெ­ரிக்க அதிபா் ஜோ பைட­னுக்கு இடையே நடக்க விருக்­கும் சந்­திப்­பில் ஐந்து முக்­கிய அம்­சங்­கள் குறித்து பேசப்­பட இருப்­ப­தாக அமெ­ரிக்கா வுக்­கான இந்­தி­யத் தூதர் தரண்­ஜித் சிங் சாந்து தெரி­வித் துள்­ளார்.

பிர­தமா் மோடி நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அமெ­ரிக்­கா­வுக்கு நான்கு நாள் அர­சு­மு­றைப் பய­ணம் மேற்­கொள்ள உள்ளாா். அப்­போது அவர், அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ் உள்­ளிட்­டோ­ரை­ சந்­தித்­துப் பேசு வ­து­டன், அமெ­ரிக்க நாடாளு மன்­றத்­தின் கூட்­டுக் கூட்­டத்­திலும் உரை­யாற்ற உள்­ளார்.

இது­கு­றித்து வாஷிங்­ட­னில் தரண்­ஜித் சிங் செய்தியாளர்­க­ளி­டம் பேசி­ய­போது, “மோடி-பைடன் பேச்சுவார்த்­தை­யில் சுகா­தா­ரம், தொழில்­நுட்­பம், புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி, கல்வி, பாது­காப்பு ஆகிய ஐந்து அம்­சங்­கள் குறித்து விவா­திக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

“தொழில்­நுட்­பம் என்­பது வணி­கம் சார்ந்­தது மட்­டு­மல்ல; அதில் தேசப் பாது­காப்­பும் ஒருங்­கி­ணைந்­துள்­ளது. இத்­தகு முக்­கி­யத்துவம் வாய்ந்த தொழில் நுட்­பத்­தைப் பகிர்ந்­து­கொள்ள ஒத்­து­ழைப்­பும் நம்­பிக்­கை­யும் அவ­சி­யம். இதனை இரு நாடுகளும் பரஸ்­ப­ரம் கொண்­டுள்­ளன.

“மருத்­துவ வச­தி­கள், மருந்து கள், தடுப்­பூசி ஆகி­யன மலிவு விலை­யில் மக்­க­ளுக்­குக் கிடைக்­கச் செய்­வது தொடா்பா­க­வும் இரு­நாட்­டுத் தலை­வா்­களும் விவா­திக்க உள்­ளனா்.

“அமெரிக்காவில் ஏறக்குறைய இரண்டு லட்சம் இந்திய மாண வர்கள் உயர்கல்வி பயின்று வரும் சூழலில், கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாகத் தலை வர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரதமர் மோடியின் இப்பயணம் இருதரப்பு உறவில் மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்று கூறினார்.

புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி தொடர்­பில் சூரிய எரி­சக்தி, பசுமை ஹைட்­ர­ஜன் குறித்து விவாதிக்­கப்­ப­ட­வுள்­ளதாக தரண்­ஜித் சிங் தெரிவித்தார்.

நியூ­யார்க்­கில் உள்ள ஐநா தலை­மை­ய­கத்­தில் நாளை மறுநாள் 21ஆம் தேதி நடக்­கும் அனைத்துலக யோகா தின நிகழ்வில் 180 நாடு­க­ளைச் சேர்ந்த தூதர்­கள், கலை­ஞர்­கள், கல்­வி­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்­கேற்க உள்ள­தாக தக­வல்­கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!