விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது

புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியை நோக்கி படையெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.

விளைபயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானா, உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த விவசாய அமைப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனா்.

இதனால், டெல்லியின் எல்லைகளில் பல்வேறு வகையான தடுப்புகள் போடப்பட்டு விவசாயிகள் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படை வீரர்களும் எல்லைகளில் குவிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பஞ்சாப்-ஹரியானா எல்லையான அம்பாலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சென்ற வெள்ளிக்கிழமை தடையை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசி தடுத்தனா்.

இதில் 63 வயது விவசாயி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோா் சண்டீகரில் வியாழக்கிழமை 3வது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இந்தப் பேச்சுவார்த்தை ஐந்து மணி நேரம் நீடித்தது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அடுத்தக்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (18 பிப்ரவரி) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

கடந்த 2020-21ஆம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

விவசாயிகள் பிரச்சினையில் அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுவதாகவும் வரும் நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்றும் சம்யுக்த கிஸான் மோா்ச்சா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!