கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வரும் 9ஆம் தேதி குண்டு வெடிக்கும் என்று முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வழி மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

கடந்த 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேசுவரம் கஃபே என்னும் பிரபல உணவகத்தில் குண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, அமைச்சர்கள் பிரியாங்க் கார்கே, கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோருக்கும், கர்நாடக மாநிலத்தின் காவல்துறை கண்காணிப்பு அதிகாரி, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

‘நீங்கள் இதுவரை கண்டது ஒத்திகை மட்டுமே. வரும் 9ஆம் தேதி பிற்பகல் 2.48 மணிக்கு கர்நாடகாவின் முக்கிய இடங்கள் குறிப்பாக பெங்களூரில் உள்ள தங்கும் விடுதிகள், கோயில்கள், வணிக வளாகங்கள், ரயில், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் குண்டுகள் வெடிக்கும். குண்டு வெடிக்கப்போவதை நிறுத்த வேண்டுமெனில் எங்களுக்கு 2.5 அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என்று அந்த மிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம் அனுப்பியவன் ஷாகித் கான் என்ற பெயரில் இருந்து அனுப்பியுள்ளான். இதுகுறித்து பெங்களூர் இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? எங்கிருந்து இது வந்துள்ளது? மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் ஐபி முகவரி உள்ளிட்ட தகவல்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!