புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டி

புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டி

1 mins read
e33ee938-1c0e-4e11-927e-a97a87781a04
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்.பி.யான வைத்திலிங்கம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் ஏற்கெனவே வேட்பாளர்கள் அடங்கிய இரண்டு பட்டியலை வெளியிட்டது.

தற்போது, காங்கிரஸ் 3ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

2019 தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது வைத்திலிங்கம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்