மோடி: நாடு விரும்பும் கட்சி பாஜக

புதுடெல்லி: நாடு விரும்பும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. இதனால் மூன்றாவது முறையாக பாஜகவை மக்கள் தேர்வு செய்வார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் திரு மோடி பேசினார்.

1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாஜக நிறுவப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே. அத்வானி ஆகியோா் பாஜகவை நிறுவினா்.

பாஜக நிறுவன தினத்தையொட்டி சனிக்கிழமை அன்று தொண்டா்களுக்கு எக்ஸ் ஊடகம் வழியாக மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“ஊழல், ஏகபோகம், ஜாதியவாதம், இனவாதம், வாக்குவங்கி அரசியல் ஆகிய கலாசாரங்களில் இருந்து பாஜக நாட்டை விடுவித்துள்ளது. நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்தவா்களின் ‘அடையாளங்களாக’ இவை இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இன்றைய இந்தியாவில், வளா்ச்சியின் பலன்கள் எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஏழைகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் களங்கமற்ற, வெளிப்படையான நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

“மத்தியிலும் மாநிலங்களிலும் நல்லாட்சியை மறுவரையறை செய்திருக்கிறோம். பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் புதிய பலத்தை தந்துள்ளன.

“ஒவ்வொரு இந்தியரின் வாழ்வையும் எளிதாக்கும் நோக்கில், அனைத்து நிலையிலான வளா்ச்சியை உருவாக்க பாஜக பணியாற்றி வருகிறது. பல்லாண்டுகளாக நமது கட்சியை கட்டியெழுப்பிய தலைசிறந்த பெண்-ஆண் தொண்டா்களின் கடின உழைப்பு, போராட்டம், தியாகத்தை இந்த நேரத்தில் நினைவுகூா்கிறேன்.

“நாட்டின் விருப்பத்துக்குரிய கட்சி பாஜக என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ‘தேசமே முதன்மையானது’ என்ற தாரக மந்திரத்துடன் எப்போதும் பணியாற்றி வருகிறோம்.

“வளா்ச்சி சாா்ந்த கண்ணோட்டம், நல்லாட்சி மற்றும் தேசியவாத மாண்புகளுக்கான அா்ப்பணிப்பின் புதிய அடையாளமாக பாஜக மாறியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

“தொண்டா்களால் இயக்கப்படும் பாஜக, 140 கோடி இந்தியா்களின் விருப்பங்களையும் கனவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இளைஞா்கள், தங்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் கட்சியாகவும் 21ஆம் நூற்றாண்டில் தேசத்துக்கு சிறந்த தலைமையை வழங்கும் கட்சியாகவும் பாஜகவை பாா்க்கின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளில் வளா்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை கட்டியெழுப்ப, மத்தியில் மற்றுமொரு பதவிக் காலத்தை பாஜகவுக்கு மக்கள் வழங்குவார்கள் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் கமிஷன் பெறுவதிலேயே கவனம் செலுத்தியது. ஆட்சிக்கு வந்தபிறகு கமிஷனுக்காகவே இந்தியா கூட்டணி கட்சிகளும் உழைத்துக்கொண்டிருக் கின்றன என்று குற்றம்சாட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!