காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி

மும்பை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் படும் இன்னல்களுக்கு நல்லதொரு விடிவுகாலம் ஏற்படும்,” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, நாட்டின் 50% மக்கள் வைத்திருக்கும் சொத்துக்குச் சமமாக வெறும் 22 பேரிடம் சொத்துகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“தங்கள் வாழ்வாதாரத்துக்காக தள்ளுவண்டி வியாபாரம் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே மாதிரியான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தும் நிலை உள்ளது.

“நாட்டின் எதிர்காலத்துக்குச் சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் என்பதால் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் இது நடத்தப்படும்.

“தன்னை பிற்படுத்தப்பட்டவர் எனக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, அந்தப் பிரிவினருக்காக கடந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன?” என வினவிய ராகுல் காந்தி, “மோடி தலைமையிலான பாஜக அரசு வெறும் ஒருசில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது. சாதாரண மக்களின் நல்வாழ்வுக்காக எதையும் செய்யவில்லை,” என சாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!